PulseNews
சினிமா

ரொம்ப சுமாரா இருக்கு, போர் அடிக்குது: ஜெயிலர் 2 முதல் பாடல் 'அல பொலேலோ' ஏமாற்றமா? இணையத்தில் குவியும் கமெண்ட்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் முதல் பாடலான "Ala Bolelo" லிரிக்கல் வீடியோ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். எனினும், இப்பாடலில் அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ள மலையாள வார்த்தைகளின் உச்சரிப்பு சரியாக இல்லை எனக் கூறி, ரசிகர்களில் ஒரு தரப்பினர் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளைத் தொடங்கியுள்ள படக்குழுவினர், வெள்ளிக்கிழமையன்று முழு லிரிக்கல் வீடியோ வெளியிட்டனர். வெளியான ஒரே மணி நேரத்திற்குள் 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இப்பாடல் சாதனை படைத்தாலும், கமெண்ட் செக்‌ஷனில் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க நடிகை ஷம்னா காசிமின் சிறப்பான நடன அசைவுகளைப் பலரும் பாராட்டியுள்ளனர். அதேசமயம், மலையாள வார்த்தைகள் கையாளப்பட்ட விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இப்பாடல் குறித்து ரெட்டிட் தளத்தில் நெட்டிசன் ஒருவர், மலையாள ரசிகர்களைக் கவர வேண்டும் என்ற நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் இந்த அவசர முயற்சி ஏமாற்றமளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், பாடல் மிகவும் சாதாரணமாகவும் (Mid), கேட்பதற்கு சுவாரஸ்யமின்றியும் உள்ளது எனக் கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன் மலையாள வரிகள் குறித்துக் குறிப்பிடுகையில், இதில் எந்தப் பகுதி மலையாளம் என்றே எனக்குப் புரியவில்லை. 'மனசிலாயோ' பாடலில் வரிகள் சுமாராக இருந்தாலும் அவர்கள் என்ன மலையாளம் பாட வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இதில், வழக்கமாக வரும் 'எட மோனே', 'பொலிச்சு' போன்ற வார்த்தைகளைத் தவிர மற்ற வரிகள் குழப்பமாகவே உள்ளன. நன்றாக இருந்த பெண் பாடகிகளின் பகுதியையும் இது கெடுத்துவிட்டது" என விமர்சித்துள்ளார். "Ala Bolelo" பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து, தயாரித்து, பாடியுள்ளார். இப்பாடலுக்கான வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். நெல்சன் இயக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் மிதுன் சக்ரவர்த்தி, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முன்னதாக ரூ.200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.604 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த 2023-ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் படமான 'ஜெயிலர்' படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ரொம்ப சுமாரா இருக்கு, போர் அடிக்குது: ஜெயிலர் 2 முதல் பாடல் 'அல பொலேலோ' ஏமாற்றமா? இணையத்தில் குவியும் கமெண்ட்கள்
PulseNews சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் 'அல பொலேலோ' என்ற முதல் பாடல் வெளியாகி உள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இருப்பினும், இந்தப் பாடலில் அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ள மலையாள வார்த்தைகளின் உச்சரிப்பு சரியாக இல்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இப்பாடல் எதிர்பார்த்த அளவு இல்லை என்று பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema