Kriti Sanon : கலாச்சாரம் மனசுல இருக்கு..மார்புல இல்ல..ஆடை சர்ச்சைக்கு க்ரித்தி சனோன் பதில்

பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்த விளம்பரம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ரக்ஷா பந்தன் குறித்த இந்த விளம்பரத்திற்கு கவர்ச்சியாக உடை அணிந்ததாக அவர் மீது சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கரித்தி பதிலளித்துள்ளார்.

விளம்பர படத்தில் கவர்ச்சி ஆடை

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் க்ரித்தி சனோன். கடந்த ஆண்டு தனுஷூடன் இணைந்து இவர் நடித்த தேரே இஷ்க் மே திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. ரக்ஷா பந்தனை முன்னிட்டு க்ரித்தி சனோன் நடித்த அணிகலன் விளம்பரம் ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த விளம்பரத்தில் க்ரித்தி சனோனின் உடை சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஒரு விளம்பரத்தில் கூட இவ்வளவு கவர்ச்சியாக உடை அணியவேண்டுமா என இணையவாசிகள் பலர் அவரை விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள். நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் க்ரித்தி சனோனை விமர்சித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது இந்த பிரச்சனையை மேலும் பெரிதுபடுத்தியது. இந்த நிலையில் க்ரித்தி சனோன் தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

க்ரித்தி சனோன் விளக்கம்

தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ரித்தி சனோன் " திருவிழாக்களின் சாராம்சம் நாம் அணியும் ஆடைகளில் இல்லை மாறாக, அந்த மரபுகளின் மீது நாம் கொண்டிருக்கும் உணர்வுகளிலும் அர்த்தத்திலும்தான் உள்ளது. ரக்ஷா பந்தன் என்பது பாதுகாப்பின் ஒரு பிணைப்பு. என் சகோதரியும் நானும் ஒருவருக்கொருவர் 'ராகி' (rakhi) கட்டிக்கொள்கிறோம். ஒரு சகோதரன் செய்யும் அதே பாதுகாப்பை நாங்களும் ஒருவருக்கொருவர் வழங்க முடியும் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் ஒருவருக்கொருவர் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்திக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை, இந்தப் பிரார்த்தனையும் உறுதியும் எங்கள் செல்ல நாய் குட்டிகளுக்கும் பொருந்தும்! ஏனென்றால், அவர்களும் எங்கள் குடும்பத்தில் ஒரு பகுதிதானே! மேலும், பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்துவதை நாம் எப்போது நிறுத்தப்போகிறோம்? பாரம்பரிய ஆடைகள் காலப்போக்கில் வளர்ந்துவிட்டன. ஆனாலும், ஒரு பெண்ணின் கலாச்சாரத்தின் மீதான மரியாதை இன்றும் அவளது ஆடைகளை வைத்தே அளவிடப்படுகிறது!! கலாச்சாரமும் மரபுகளும் ஒரு பெண்ணின் இதயத்தில்தான் உள்ளன, அவளது ஆடையின் கழுத்து வடிவமைப்பிலோ அல்லது ஆடையின் அளவிலோ இல்லை!" என பதிவிட்டுள்ளார்

ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு நடிகை க்ரித்தி சனோன் நடித்த விளம்பரம் ஒன்று சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த விளம்பரத்தில் அவர் கவர்ச்சியான உடை அணிந்திருந்ததாகக் கூறி பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள க்ரித்தி சனோன், கலாச்சாரம் என்பது ஒருவரின் ஆடையில் இல்லை, அது மனதில் மட்டுமே உள்ளது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.