PulseNews
சினிமா

கயாடு லோஹரை காண குவிந்த ரசிகர்கள்; பரபரப்பாக மாறிய கடை திறப்பு விழா!

தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வரும் கயாடு லோஹர் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். கைவசம் மஞ்சணத்தி, சூர்யா 48 உள்ளிட்ட பல்வேறு படங்களை வைத்துள்ளார். இதனிடையே பல்வேறு தனியார் கடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். இதுவரை சென்னை, சேலம் என கலந்து கொண்டிருந்த அவர் முதல் முறையாக மதுரையில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். மதுரை பைப்பாஸ் சாலை பகுதியில் குழந்தைகள் தொடர்பான ஒரு தனியார் கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவரைக் காண அங்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். அரசு விடுமுறை தினம் என்பதால் அதிக பேர் கூடியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சற்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கயாடு லோஹருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் முந்தியடித்ததால் அவர்களை கட்டுபடுத்த காவல்துறையினரும் பவுன்சர்களும் திணறினர். ஒரு வழியாக ரசிகர்களின் தள்ளு முள்ளுக்கு இடையே அவர் கடையின் உள்ளே சென்று குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்பு கடைக்கு வெளியே போடப்பட்டிருந்த சிறிய மேடையில் தன்னை காண வந்த ரசிகர்களை நோக்கி கையசைத்து நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “மதுரை எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். இங்குள்ள உணவு வகைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார். பின்பு ம்ேடையை விட்டு இறங்கி கார் அருகே செல்லும் வரையில் அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் சற்று பரபரப்பான சூழல் அங்கு உண்டானது. ஆனால் இறுதியில் யாருக்கும் எந்த விதமான அசம்பாதவிதமும் நடக்காமல் அவ்விழா நடந்து முடிந்தது. அவர் பாதுகாப்பாக காரில் ஏறி சென்றார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கயாடு லோஹரை காண குவிந்த ரசிகர்கள்; பரபரப்பாக மாறிய கடை திறப்பு விழா!
PulseNews சுருக்கம்

தென்னிந்தியத் திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் கயாடு லோஹர், மஞ்சணத்தி மற்றும் சூர்யா 48 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்புகளுக்கு இடையே பல்வேறு கடை திறப்பு விழாக்களிலும் அவர் பங்கேற்று வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, மதுரை பைபாஸ் சாலையில் நடைபெற்ற குழந்தைகள் தொடர்பான தனியார் கடை திறப்பு விழாவில் கயாடு லோஹர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சென்னை மற்றும் சேலத்தைத் தொடர்ந்து, முதன்முறையாக மதுரையில் அவர் பங்கேற்ற இந்த நிகழ்வில், அவரை நேரில் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema