PulseNews
சினிமா

“25 வருஷம் ஆச்சு... சங்கமம் படத்துல ஜூனியர் ஆர்டிஸ்டா...” - சூரியின் வளர்ச்சி குறித்து ஆர்.ஜே.பாலாஜி

செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தை வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்க தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும் சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார் உள்ளிட்டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களிலும் நடித்துள்ளனர். இப்படம் கடலில் நடக்கும் படகு போட்டியை மைய்யமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதனால் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கடல் பகுதிகளில் படமாக்கப்பட்டது. அந்த வகையில் இராமநாதபுர கடலில் பல மாதங்களாக நடந்தது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாடல்களை பொறுத்தவரை கடந்த ஜூலையில் வெளியான ‘மண்டாடி மண்டாடி’ முதல் பாடல் சூரி நடனம் கவனம் பெற்றது. இதையடுத்து சமீபத்தில் வெளியான ‘உசுரே நீதான் புள்ள...’ பாடல் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அண்மையில் வெளியான படத்தின் டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆர்.ஜே.பாலாஜி, “இந்த நிகழ்வுக்கு என்னுடைய நண்பர் சூரிக்காகத்தான் வந்தேன். அவரும் நானும் படத்துல நடிச்சதே இல்ல. எந்த ஒர்க்கிங் ரிலேஷன் ஷிப்பும் கிடையாது. நேர்லையும் பெருசா பார்த்துக்கிட்டது கிடையாது. காதல் கோட்டை படத்துல வர பார்க்காமலே லவ் பண்ற மாதிரி நானும் அவரும் மானசீகமான அன்பு வச்சிருந்தோம். ஆனா இரண்டு வருஷம் முன்னாடி எங்களுக்குள்ள தொடர்பு இருந்துச்சு. அப்போதிலிருந்து நாங்க பயங்கரமா அன்பு காட்ட ஆரம்பிச்சுட்டோம். சினிமா சம்பந்தம் இல்லாத விஷயங்கள் நிறைய பேசுவோம். நான் படம் ரிலீஸாகுறதுல பிரச்சனை சந்திச்ச போது எனக்கு ஃபர்ஸ்டு கால் பண்ணுனது அவரு தான். படம் வெற்றி பெற்றாலும் சந்தோஷப்பட்டது அவர் தான். அவர் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். விடுதலை படத்துல இருந்து அவரு என்ன சாதிச்சிருக்காருன்னு அவருக்கே தெரியாது. ஏன்னா சங்கமம் படத்துல ஜூனியர் ஆர்டிஸ்டா அவர் வருவாரு. அந்தபடத்துல விஜயகுமார் சார் கார் வரும் போது அது 10 பேர இடிச்சுட்டு போகும், அதுல ஒருத்தர் பறந்து போவாரு. அதுதான் சூரி. 1999ல சங்கமம் வந்துச்சி. அதிலிருந்து ஒரு இடம் கிடைக்க 25 வருஷம் ஆச்சு. அவர் எப்போதுமே முயற்ச்சியை விட்டுவில்லை. ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டா, எலெக்ட்ரீஷியனா, கார்பெண்டரா, காமெடி ஆக்டரா நிறைய இடங்களை தாண்டி வந்திருக்கார். 20 வருஷத்துக்கு முன்னாடி சினிமா இவ்ளோ ஜனநாயகமா இல்ல. எல்லாரும் ஈஸியா வர முடியாது. எல்லாருக்கும் அவங்களுக்கு கீழ இருக்குற வரைக்கும் பிடிக்கும். அவங்களுக்கு ஈக்குவலானா, அதை விட மேலே போனா பிடிக்காது. ஆனா அதையெல்லாம் மீறி இந்த இடம் இவ்ளோ ஜனநாயகமா மாறியிருக்கு. எந்த ஒரு பின்புலமும் இல்லாம சூரியால் இவ்ளோ தூரம் வர முடியும்னா எல்லாரலையும் வளர முடியும். அதுக்கான பெரிய இன்ஸ்பிரேஷனாத் தான் சூரியை பார்க்குறேன். அவருக்கு நிறைய போஸ்டர்கள் ஒட்டுறாங்க. இதுதான் வளர்ச்சி. சூரியே அவருக்கு போஸ்டர் ஒட்டுறாருன்னு நினைச்சா ஆமா, எங்களுக்கு நாங்க தான் பண்ணிக்கணும், வேறு யாரும் பண்ணிக்க மாட்டாங்க” என்றார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“25 வருஷம் ஆச்சு... சங்கமம் படத்துல ஜூனியர் ஆர்டிஸ்டா...” - சூரியின் வளர்ச்சி குறித்து ஆர்.ஜே.பாலாஜி
PulseNews சுருக்கம்

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், எல்ரெட் குமார் தயாரிப்பில் சூரி நடிக்கும் புதிய திரைப்படம் 'மண்டாடி'. வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

கடலில் நடக்கும் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில், மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய் மற்றும் அச்யுத் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema