PulseNews
சினிமா

சிறிய பட்ஜெட், ஒரே இரவில் நடக்கும் கதை; இந்த மாதிரி படங்களுக்கு ஆதரவு கொடுங்க: 'மொத ராத்திரி' படத்தை பாராட்டிய சிம்பு

‘மோத ராத்திரி’ படத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சிம்பு, சிறிய படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கூடுதல் ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். கிராமத்து திருமணத்தை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட திரைப்படம் மொத ரத்திரி. இந்தப் படத்தின் மூலம் ரிஷிகாந்த் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக அனிஷ்மா அனில்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்தூல் லீ மற்றும் ஷெல்லி கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி வெளியான ஒரே இரவில் நடைபெறும் வகையில் கதை நகர்கிறது. நகைச்சுவையுடன் உணர்வுப்பூர்வமான காட்சிகளையும், எதிர்பாராத திருப்பங்களையும் வழங்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது சிலம்பரசன் இப்படத்திற்கு தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவித்திருப்பது, ‘மோத ராத்திரி’ படத்தின் மீதான கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது. சிறிய படங்கள் மற்றும் தனித்துவமான, அசல் தமிழ் படைப்புகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற விவாதங்கள் திரையுலகில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிலம்பரசனின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான வரவேற்பைப் பெற்று வரும் ‘மோத ராத்திரி’ படத்திற்கு நடிகர் சிலம்பரசன் தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இப்படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமியின் கதை சொல்லும் விதத்தைப் பாராட்டியுள்ளார். ரசிகர்கள் திரையரங்குகளில் இப்படத்தைப் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர். அதே நேரத்தில், சிறிய படங்களை திரையுலகம் எவ்வாறு அணுகுகிறது என்பது குறித்தும் அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். சிறிய படங்கள் தங்களது கதைக்களம் மற்றும் தரத்திற்காக உண்மையான பாராட்டுகளைப் பெற்றாலும், அவை அதிக அளவில் ரசிகர்களைச் சென்றடைவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன. நமது தயாரிப்பாளர்களுக்கும் ஒரு சிறிய வேண்டுகோள். இதுபோன்ற படங்கள் ரசிகர்களைச் சென்றடைய கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது. நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அனைவராலும் கண்டறியப்பட்டு கொண்டாடப்பட வேண்டும். பிற மொழிகளில் வெளியாகி பாராட்டுகளைப் பெறும் படங்களுக்கு வழங்கப்படும் அதே அளவிலான வரவேற்பும் உற்சாகமும், புதுமையான கதைக்களத்துடன் உருவாகும் நம்முடைய சொந்த தமிழ் படங்களுக்கு பல நேரங்களில் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளார். Watched #ModhaRathri and really enjoyed it. We often discover small, beautiful films from other languages and celebrate them so much. When a Tamil film attempts something fresh with a new team, I feel we should give it the same love and support. A story unfolding over a single... pic.twitter.com/wcI2E9XI9G — Silambarasan TR (@SilambarasanTR_) August 28, 2026 மோத ராத்திரி’ படத்தைப் பார்த்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட சிலம்பரசன், மொத ரத்திரி படத்தைப் பார்த்தேன். மிகவும் ரசித்தேன். பிற மொழிகளில் வெளியாகும் சிறிய, அழகான படங்களை நாம் அடிக்கடி கண்டறிந்து, அவற்றை மிகவும் கொண்டாடுகிறோம். அதேபோல், ஒரு புதிய படக்குழுவுடன் தமிழ் திரைப்படம் ஒன்று புதுமையான முயற்சியை மேற்கொள்ளும்போது, அதற்கும் நாம் அதே அளவிலான அன்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரே இரவில் நடைபெறும் வகையில் அமைந்துள்ள கதை. ஒரு கிராமத்து திருமணத்தைச் சுற்றி நடக்கும் இந்தக் கதையில் ஏராளமான கதாபாத்திரங்களும், நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஏராளமான சிறிய தருணங்களும் இடம்பெற்றுள்ளன. திரைக்கதை, நகைச்சுவை மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சிறிய பட்ஜெட், ஒரே இரவில் நடக்கும் கதை; இந்த மாதிரி படங்களுக்கு ஆதரவு கொடுங்க: 'மொத ராத்திரி' படத்தை பாராட்டிய சிம்பு
PulseNews சுருக்கம்

'மோத ராத்திரி' திரைப்படத்தை நடிகர் சிம்பு வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார். ஒரே இரவில் நடக்கும் கிராமத்துக் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தச் சிறிய பட்ஜெட் படத்திற்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரிஷிகாந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அனிஷ்மா அனில்குமார் நடித்துள்ளார். மேலும் சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்தூல் லீ மற்றும் ஷெல்லி கிஷோர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema