PulseNews
சினிமா

OTT Release: போலீஸ் அதிகாரிகளை கொல்லும் சைக்கோ, இறுதியில் சூப்பர் ட்விஸ்ட்: மிஸ் பண்ணக் கூடாத த்ரில்லர் படங்கள்

வார இறுதி வந்தால் போதும் அலுவலகம் செல்வபவர்களுக்கு ஓய்வு கிடைப்பது போல், ஓய்வு நேரத்தில் என்ன படம் பார்க்கலாம் என்று சிந்திப்பவர்கள் தான் அதிகம். அதுவும் ஒடிடி தளங்கள் பிரபலமான பிறகு, திரையரங்குகளை விட, வீட்டில் இருந்தே படம் பார்க்க பலரும் விரும்புகின்றனர். இந்த மாதிரியான சினிமா ரசிகர்களுக்கு பரபரப்பை கொடுக்கும் வகையில் படங்கள் படங்கள் உள்ளது. அதிலும் மலையாள படங்கள் தனி ரகமாக இருக்கும். அந்த வரிசையில் இந்த வார இறுதியில் சீட் நுனியில் அமர வைக்கும் அளவுக்கு மலையாளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள் சிலற்றை இந்த பதிவில் பார்ப்போம். வழக்கமான கமர்ஷியல் படங்களைத் தாண்டி, ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்புடன் நகரும் திரைப்படங்களை பார்க்க விரும்புபவர்களுக்கு மலையாள த்ரில்லர் படங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். அந்த வகையில், ஓடிடியில் பார்க்கக்கூடிய 5 சுவாரஸ்யமான மலையாள த்ரில்லர் படங்களை இங்கே பார்க்கலாம். கோலம் (Golam) ஒரு அலுவலகத்தை பின்னணியாகக் கொண்டு நடைபெறும் கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘கோலம்’. ஒரு அலுவலகத்தின் சி.இ.ஒ கழிவறையில் மரணமடைந்து கிடக்கிறார். இது கொலையா? தற்கொலையா? அவர் எப்படி இறந்தார் என்பதை காவல்துறை அதிகாரி விசாரணை நடத்துகிறார். ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்த படம், வழக்கமான க்ரைம் கதைகளிலிருந்து சற்று மாறுபட்ட கதைக்களமாக இருக்கும். இந்த படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ‘கோலம்’ படத்தை பார்க்கலாம். ஆபரேஷன் ஜாவா (Operation Java) டெக்னாலஜி மற்றும் சைபர் க்ரைம் பின்னணியில் பரபரப்பாக நகரும் திரைப்படம் ‘ஆபரேஷன் ஜாவா’. ஒவ்வொரு சம்பவத்துக்கும் பின்னால் இருக்கும் உண்மை என்ன என்பதை தெரிந்துகொள்ளும் பரபரப்பான காட்சிகளுடன் நகரும் இந்த படம், டெக்னாலஜி சார்ந்த க்ரைம் த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு இது சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். இப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம். அஞ்சாம் பத்திரா (Anjaam Pathiraa) தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் காவல்துறை அதிகாரிகள் வரிசையாக கொல்லப்படுகிறார். இந்த வழக்கை காவல்துறையில் சேர விரும்பும் ஒரு நபர் எப்படி கண்டுபிடித்து தீர்க்கிறார் என்பது தான் கதை. தொடர்ச்சியான கொலைகள், விசாரணை மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் என கதை வேகமாக நகர்கிறது. க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு இது நிச்சயம் நல்ல தேர்வாக இருக்கும். இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். கொரோனா பேப்பர்ஸ் (Corona Papers) தொடக்கம் முதல் இறுதிவரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த திரைப்படம், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. கதையில் வரும் சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று இணையும் விதமும், அடுத்தடுத்து ஏற்படும் திருப்பங்களும் படத்தை இறுதிவரை பார்க்கத் தூண்டுகின்றன. வார இறுதியில் பரபரப்பான ஒரு த்ரில்லர் திரைப்படத்தை பார்க்க விரும்புபவர்கள் இந்தப் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். புலிமடா (Pulimada) ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘புலிமடா’ திரைப்படத்தில் ஒரு சிவில் போலீஸ் அதிகாரியைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டது. வழக்கமான த்ரில்லர் படங்களைப் போல இல்லாமல் கேரக்டாகளின் மனநிலை மற்றும் சம்பவங்களின் பின்னணியையும் திரைப்படம் முக்கிய அம்சமாக எடுத்துக்கொள்கிறது. இந்த படத்தை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
OTT Release: போலீஸ் அதிகாரிகளை கொல்லும் சைக்கோ, இறுதியில் சூப்பர் ட்விஸ்ட்: மிஸ் பண்ணக் கூடாத த்ரில்லர் படங்கள்
PulseNews சுருக்கம்

வார இறுதி விடுமுறையில் வீட்டிலிருந்தே திரைப்படங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்கு, ஓடிடி தளங்களில் மலையாள த்ரில்லர் படங்கள் சிறந்த தேர்வாக அமைகின்றன. குறிப்பாக, போலீஸ் அதிகாரிகளைக் குறிவைத்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளியை மையமாகக் கொண்டு, இறுதியில் எதிர்பாராத திருப்பங்களுடன் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கின்றன.

பரபரப்பான திரைக்கதையுடன் சீட் நுனியில் அமர வைக்கும் வகையில் அமைந்துள்ள இத்தகைய த்ரில்லர் மலையாளத் திரைப்படங்கள், இந்த வார இறுதியில் திரையரங்குகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே சினிமா விருந்து காண விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாகும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema