நண்பர்களே சீக்கிரம் ஷூட்டிங்கை முடிங்க, கெட்டப் மாற்ற முடியல; பென்ஸ் படக்குழு மீது அதிருப்தியில் நிவின் பாலி
லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வருவது குறித்து நடிகர் நடிகர் நிவின் பாலி, படக்குழுவினரை வெளிப்படையாக விமர்சித்துள்ளார் . ரேகா மேனனுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனது கேரக்டருக்கான தோற்றத்தை மாற்றாமல் இருக்க ஒப்பந்த அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளேன். இதனால் மற்ற படங்களுக்காக எனது தோற்றத்தை மாற்ற முடியாத நிலையில் இருக்கிறேன். அதே நேரத்தில் ‘பென்ஸ்’ படக்குழு எனது மீதமுள்ள படப்பிடிப்பு நாட்களை தொடர்ந்து ஒத்திவைத்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். நிவின் பாலி தனது சமீபத்திய சில படங்களிலும் ஒரே தோற்றத்தில் நடித்திருப்பதை சுட்டிக்காட்டிய தொகுப்பாளர், இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட “நிவின் பாலி ஃபேக்டர்” என்கிற விஷயமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நேரடியாக பதிலளித்த நிவின் பாலி, அப்படி ஒன்றும் இல்லை. ‘பென்ஸ்’ என்ற தமிழ் படத்திற்கான எனது ஒப்பந்தத்தின் காரணமாக என்னால் தோற்றத்தை மாற்ற முடியவில்லை. அதற்காக முறையான ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதன்படி எனது தோற்றத்தை பராமரிக்க வேண்டியிருந்தது. கடந்த ஆண்டு படப்பிடிப்பை தொடங்கினோம். ஆனால் தொடர்ந்து படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது,” என்று அவர் கூறினார். ‘பென்ஸ்’ படத்தில் வால்டர் என்ற இரக்கமற்ற, கொடூரமான வில்லன் கேரக்டரில் நிவின் பாலி நடிக்கிறார். இந்த கேரக்டர் “ட்வின் ஃபிஷ் வால்டர்” என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் நிவின் பாலி முழுநீள வில்லனாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். 2025 நவம்பரில் தனது முதல் கட்ட படப்பிடிப்பை அவர் நிறைவு செய்தார். அதன்பின்னர், 2026 ஜனவரியில் அளித்த பேட்டியில் இன்னும் 35 நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கடந்தும் அந்த படப்பிடிப்பு இன்னும் நிறைவடையவில்லை. இதனால் நிவின் பாலியின் அதிருப்தி பேட்டியிலும் வெளிப்பட்டது. இதற்கிடையில் அவர் பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும், அவற்றில் இரண்டு திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளதாகவும் தொகுப்பாளர் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த நிவின் பாலி: இப்போது ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ மற்றும் சமீபத்தில் தொடங்கப்பட்ட மற்றொரு படத்திற்காகவும் என்னால் தோற்றத்தை மாற்ற முடியவில்லை. ஏனென்றால், இன்னும் 30 முதல் 35 நாட்கள் படப்பிடிப்பு செய்ய வேண்டியுள்ளது. எதுவுமே நகர்வது போல் தெரியவில்லை. இது தொடர்பாக அவர்களை அழைத்துப் பேசி பேசி எனக்கே சோர்வாகிவிட்டது. நண்பர்களே, குறைந்தபட்சம் இந்த பேட்டியைப் பார்த்த பிறகாவது ஒரு முடிவெடுத்து படத்தை முடித்துக் கொடுங்கள்,” என்று கூறினார். பென்ஸ்’ திரைப்படத்தை பக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இதன் திரைக்கதையை அவர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து எழுதியுள்ளார். இது லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸின் (LCU) நான்காவது திரைப்படம் ஆகும். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்காத முதல் எல்.சி.யூ திரைப்படமும் இதுவாகும். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். நிவின் பாலி, ஆர். மாதவன் மற்றும் சம்யுக்தா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ‘கைதி’ திரைப்படத்தின் டில்லி கேரக்டரில் நடித்த கார்த்தி, இந்தப் படத்தில் கிராஸ்ஓவர் கேரக்டரில் மீண்டும் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் எந்த அளவுக்கு படத்தில் இடம்பெறுகிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாவதால், நடிகர் நிவின் பாலி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ரேகா மேனனுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக, ஒப்பந்தத்தின் காரணமாக தனது கதாபாத்திரத்திற்கான தோற்றத்தை மாற்ற முடியாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மற்ற படங்களில் நடிப்பதற்காக தோற்றத்தை மாற்ற முடியாத சூழலில் இருப்பதாகத் தெரிவித்துள்ள நிவின் பாலி, படப்பிடிப்பை விரைந்து முடிக்குமாறு படக்குழுவினரை வலியுறுத்தியுள்ளார்.