PulseNews
சினிமா

"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா

தமிழ் திரையுலகில் 85,90 காலகட்டங்களில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சீதா. 1985ம் ஆண்டு அறிமுகமான ஆண் பாவம் என்ற படம் மூலமாக நடிகையாக அறிமுகமான அவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, ராம்கி, பார்த்திபன் என அப்போதைய முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார்.

பாண்டியராஜன்தான் காரணம்:

இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, முதல் படம் பாண்டியராஜனுடன் பண்ணேன். அதன்பின்பு, 4, 5 வருடங்களில் திருமணமாகிவிட்டது. ஒரு பிரச்சினை வந்து நான் வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் எங்க இயக்குனர் மீது எனக்கு பயங்கர மரியாதை வந்தது. ஏனென்றால், அந்த ஒரு தொழில்தான் எனக்குத் தெரிந்த தொழில். என்னைக் காப்பாற்றிய தொழில்.

என்னைக் கைகொடுத்து தூக்கியது இதெல்லாம் நான் 2வது முறையாக நடிக்கத் தொடங்கிய பிறகுதான் வந்தது. இன்று நான் சாப்பாடு சாப்பிடுவதற்கு காரணம் எனது இயக்குனர் பாண்டியராஜனே ஆவார். அன்று அவர் என்னைக் கொண்டு வந்ததுதான். நான் பெரியதாக ஏதும் படிக்கவில்லை. நான் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். இதனால், என்றுமே நான் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நன்றியுடன் இருப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆண்பாவம்:

நடிகை சீதா பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் படத்தில் அறிமுகமானார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. பாண்டியராஜன் நடிகராகவும், இயக்குனராகவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அந்த படத்தில் நடிகர் பாண்டியன், ரேவதி, விகே ராமசாமி என பெரிய பட்டாளமே நடித்திருப்பார்கள்.

இந்த படத்திற்கு பிறகு ஆயிரம் பூக்கள் மலரட்டும், சங்கர் குரு, குரு சிஷ்யன், உன்னால் முடியும் தம்பி, புதிய பாதை, ராஜநடை, ஆடி வெள்ளி, மருதுபாண்டி என பல படங்களில் நடித்தார். புதிய பாதை படத்தின்போது பார்த்திபனுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி அவரை திருமணம் செய்து கொண்டார்.

குணச்சித்திர வேடத்தில் அசத்தல்:

1992ம் ஆண்டுக்கு பிறகு 2002ம் ஆண்டு மீண்டும் குணச்சித்திர வேடத்தில் நடிக்கத் தொடங்கினார். அதன்பின்பு, விஜய், அஜித், ஜெயம் ரவி, எஸ்ஜே சூர்யா, பரத், பிரசாந்த் என பலருடன் இணைந்து நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா
PulseNews சுருக்கம்

எண்பது மற்றும் தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சீதா. 1985-ம் ஆண்டு வெளியான 'ஆண் பாவம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, ராம்கி மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சீதா, தான் இன்று உணவு உண்பதற்கே நடிகர் பாண்டியராஜன் தான் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தனது திரைப்பயணத்தின் முதல் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்த அவர், தனக்கு வாய்ப்பளித்ததற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema