நயன்தாராவின் அந்த படத்தின் டிக்கெட்டை அடிச்சி புடிச்சி வாங்கி பார்த்தேன் – கவின் ஓபன் டாக்!
Kavin Shares Fan Moment: தமிழ் சினிமாவில் சின்னத்திரை நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம்வருபவர் கவின். இவர் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள புது திரைப்படம்தான் ஹாய். சமீபத்தில் புரோமோஷன் நேர்கணலில் கலந்துகொண்ட கவின், நயன்தாராவின் திரைப்படத்தை நண்பர்களுடன் பார்க்க சென்றது குறித்து பேசியுள்ளார்.

சின்னத்திரை நடிகராகப் பயணத்தைத் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் கவின். இவர் நயன்தாராவுடன் இணைந்து 'ஹாய்' எனும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு விளம்பர நேர்காணலில் கலந்துகொண்ட கவின், தான் நயன்தாராவின் தீவிர ரசிகராக இருந்த காலத்தை நினைவு கூர்ந்தார். அப்போது, நயன்தாராவின் திரைப்படத்திற்காக நண்பர்களுடன் சேர்ந்து மிகுந்த சிரமப்பட்டு டிக்கெட் எடுத்துப் பார்த்த சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.