PulseNews
வணிகம்

Cooperative Banks Gold Loan : தங்க நகைக்கடன் வாங்குவோருக்கு இனி குஷிதான்.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.? கூட்டுறவுத் துறை செம PLAN

அட்ஷய பாத்திரமாக தங்க நகைக்கடன்

தங்கத்தின் மதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அதிகரித்தே வருகிறது. அந்த வகையில் தங்கள் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாக தங்க நகைகளை மக்கள் வாங்குகிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 25 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய நிலையில், இன்று ஒரு சவரன் 1.25லட்சத்தை எட்டியுள்ளது. எனவே முன்பு 10 சவரன் 2 அரை லட்சத்திற்கு வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்டாக இன்று 10 சவரன் 15 லட்சத்தை எட்டி லாபத்தை கொடுத்துள்ளது.

தங்க நகைக்கடனுக்கு கட்டுப்பாடுகள்

இந்த நிலையில் தங்க நகைகளை ஆடம்பரமாக இருந்தாலும், ஒரு வகையில் அத்தியாவசிய தேவைக்கு உதவும் அட்ஷய பாத்திரமாக உள்ளது. மருத்துவம், கல்வி என அவசர தேவைக்கு நகைகளை அடகு வைக்கவோ.? விற்பனை செய்ய எளிதாக முடியும். அந்த வகையில் வங்கியில் நகைகளை அடகு வைத்து மக்கள் பணத்தை பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது நிலையற்ற தன்மையாக குறைந்து வந்தது. குறிப்பாக 1.34 லட்சத்திற்கு விற்பனையாக தங்கத்தின் விலையானது கடந்த ஏப்ரல் மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு சரிந்தது. இதனால் வங்கிகள் நகைகளை அடகு வைத்து பணம் கொடுப்பதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

நகைக்கடனை அதிகரிக்க கோரிக்கை

இந்த நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கிராம்புற மக்கள் குறைவாக வட்டியில் கடனை தரும் கூட்டுறவு வங்கிகள் கிராமுக்கு 7500 முதல் 8000 ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறது.எனவே இந்த தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. மேலும் அதிகளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளும் நகைக்கடன் தொகையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

கிராம் ஒன்றுக்கு 10,000 ரூபாய் கடன்

அந்த வகையில் கூட்டுறவுத் துறையின் கீழ் நகர கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த வங்கிகளில் கிராம் ஒன்றுக்கு 10,000 ரூபாய் வழங்க கூட்டுறவு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த வாரம் அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் சுற்றறிக்கை வெளியிடப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Cooperative Banks Gold Loan : தங்க நகைக்கடன் வாங்குவோருக்கு இனி குஷிதான்.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.? கூட்டுறவுத் துறை செம PLAN
PulseNews சுருக்கம்

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்காக தங்க நகைகளைச் சேமிப்பாக வாங்கி வருகின்றனர். ஒரு சவரன் தங்கம் முன்பு 25 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது அதன் விலை 1.25 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது.

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைக் கண்டாலும் நகைக்கடைகளில் பொதுமக்களின் கூட்டம் குறையவில்லை. கடந்த காலங்களில் 2.5 லட்சம் ரூபாய்க்கு 10 சவரன் தங்கம் வாங்கியவர்களுக்கு, தற்போது அதன் மதிப்பு பலமடங்கு உயர்ந்து லாபகரமாக மாறியுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business