PulseNews
வணிகம்

Chennai News Live Updates : லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு; கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்துகிறது - ஸ்டாலின்

பெட்ரோ, டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) ஆகியவற்றின் விற்பனை விலையில் எந்தவித மாற்றமுமின்றி முந்தைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ சிஎன்ஜி ரூ.97.00 என விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு மழை? சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையில் அதிகபட்சமாக அண்ணாநகர் மேற்கு பகுதியில் 50.1 மி.மீ (சுமார் 5 செ.மீ) மழை பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை (TNDRRA) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னையில் பதிவான முக்கிய மழை அளவு விவரங்களை பதிவிட்டுள்ளார். அதன்படி, அண்ணாநகர் மேற்கு (Z 08, வார்டு 95): 50.1 மி.மீ, பெரம்பூர் மாநகராட்சி பூங்கா: 48.3 மி.மீ, தண்டையார்பேட்டை சி.டி மருத்துவமனை: 48 மி.மீ, கொரட்டூர் (Z 07, வார்டு 86): 45.8 மி.மீ, பெரம்பூர் (Z 06, வார்டு 67): 45.3 மி.மீ, சென்னை சென்ட்ரல் (Z 05, வார்டு 58): 30.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Chennai News Live Updates : லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு; கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்துகிறது - ஸ்டாலின்
PulseNews சுருக்கம்

சென்னையில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலையில் எந்த மாற்றமும் இன்று இல்லை. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 107.77 ரூபாய்க்கும், டீசல் 99.55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ சிஎன்ஜி 97 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையில், அதிகபட்சமாக அண்ணாநகர் மேற்கு பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business