2023-ஆம் ஆண்டில் வரி ஏய்ப்பு செய்தவர்களின் தகவல்களை வெளியிட விசேட உத்தரவு
2024ஆம் ஆண்டு கடப்பாடுகளை(Obligations) அறவிடுவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வரி செலுத்துநர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை, வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு (RTIC), உத்தரவிட்டுள்ளது. அத்துடன், 2023 டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி மொத்தம் ரூ.84 பில்லியன் வரி மிகுதி வைத்திருந்த செலுத்துநர்களின் பெயர்கள் மற்றும் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய தொகையின் விபரங்களையும் வெளியிடுமாறு ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை 84 பில்லியன் ரூபா வரி நிலுவை வைத்துள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் விபரங்களை வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. அந்தந்த நபர்கள் செலுத்த வேண்டிய வரித் தொகையையும் பகிரங்கப்படுத்துமாறு ஆணைக்குழு பணித்துள்ளது.
2024ஆம் ஆண்டு வரி அறவீடு இடைநிறுத்தப்பட்டதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்திருந்த வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்களின் பெயர்களையும் வெளியிடுமாறு இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.