PulseNews
வணிகம்

TASMAC employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! விடுமுறை, பணி உயர்வு, முன் பணம் வெளியான அசத்தல் அறிவிப்புகள் இதோ..

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவிப்புகள்

தமிழக சட்டமன்றத்தில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வைத் துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக இந்த துறையின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டுள்ளார்.

கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி வருபவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு நிதி ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவிற்கு ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் நவீன உபகரணங்கள் மற்றும் புதிய வாகனங்கள் வழங்கப்படும்.

கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை கண்காணிக்க 10 All Terrain Vehicles மற்றும் 10 Surveillance Drones வழங்கப்பட உள்ளன.

‘e-Kalaal’ இணையவழி சேவையில் ஒருங்கிணைந்த சேவைகள் மற்றும் செயல்பாடுகளை முழுமையாக மின்னணுமயமாக்க ரூ.1.69 கோடி செலவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். FL2, FL3, FL3A உள்ளிட்ட உரிமங்களுக்கான சேவைகளும் மேம்படுத்தப்பட உள்ளன.

கள்ளச்சாராயம், போதை மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரங்களுக்கான நிதி ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்.

கள்ளச்சாராயம், போலி மற்றும் கலப்பட மதுபானங்கள், போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கப்படும்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் 8 மணி நேர பணி ஒதுக்கீடு,

வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை, மாதத்தில் 2 நாள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.

பணியாளர்களில் தகுதியுடைய 250 பணியாளர்களை சிறப்பு தேர்வு மூலம் இளநிலை உதவியாளராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சில்லறை கடைகளில் தூய்மை பணி மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய மாநகர கடைகளுக்கு 5000, நகராட்சி பேரூராட்சி கடைகளுக்கு 4000, கிராமப்புற கடைகளுக்கு 3 ஆயிரம், சில்லறை செலவினங்கள் மேற்கொள்ள வழங்கப்படும்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
TASMAC employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! விடுமுறை, பணி உயர்வு, முன் பணம் வெளியான அசத்தல் அறிவிப்புகள் இதோ..
PulseNews சுருக்கம்

தமிழக சட்டமன்றத்தில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, துறை அமைச்சர் விக்னேஷ் மதுவிலக்குத் துறை தொடர்பான பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சட்டவிரோத மது விற்பனை மற்றும் கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள், விடுதலையான பின் மறுவாழ்வு பெறுவதற்கான நிதியுதவி ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business