PulseNews
வணிகம்

FQL பிட்காயின் மோசடி: ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள், பாதுகாப்பு தீவிரம்!

FQL பிட்காயின் முதலீடு மோசடி புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏமாற்றமடைந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகை தரவுள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிப்பு - FQL மோசடி தொடர்பாக மனுக்களை பெற தனி அலுவலர்கள் நியமனம்

பல கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள்

மதுரை மேலூர், அலங்காநல்லூர், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்லயிரக்கணக்கான பொதுமக்களிடம் FQL மற்றும் VG டிரேடிங் மொபைல் மூலமாக பிட்காயின் ஷேர் மார்க்கெட் என்ற அடிப்படையில் பல கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனு அளித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் குவிப்பு - பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

முதலீடு செய்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள்

காந்தி அருங்காட்சியகம், அண்ணா பேருந்து நிலைய ரவுண்டானா ஆகிய பகுதிகளிலும் காவல்துறை குவிப்பு. மேலும் FQL நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மனுக்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
FQL பிட்காயின் மோசடி: ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள், பாதுகாப்பு தீவிரம்!
PulseNews சுருக்கம்

FQL மற்றும் விஜி டிரேடிங் செயலிகள் மூலம் பிட்காயின் முதலீடு என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை மேலூர், அலங்காநல்லூர், திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரள உள்ளதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மோசடி தொடர்பான புகார்களைப் பெறுவதற்காகத் தனி அலுவலர்களை நியமித்து நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business