PulseNews
வணிகம்

Gold Silver Rate Aug.28th: இப்படி ஷாக் கொடுத்துட்டியே.! இன்று மாலையில் கணிசமாக உயர்ந்த தங்கம் விலை; தற்போதைய விலை என்ன.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று காலையிலும் சவரனுக்கு 600 ரூபாய் குறைந்தது. ஆனால், மாலையில் சவரனுக்கு 600 ரூபாய் விலை உயர்நது அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதேபோல், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

சமீபத்திய தங்கம் விலை நிலவரம்

ஆகஸ்ட் 24-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து 15,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 120,240 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 25-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 15,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 1,20.080 ரூபாய்க்கு விற்பனை .

ஆகஸ்ட் 26-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை.

ஆகஸ்ட் 27-ம் தேதி காலை கிராமிற்கு 285 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,725 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,21,240 ரூபாய்க்கும் விற்பனை.

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இந்த வாரத்தில் கணிசமாக விலை குறைந்து வந்தது. இந்த நிலையில், இன்று காலையிலும், தங்கத்தின் விலையானது கணிசமாக குறைந்தது.

அதன்படி, கிராம் ஒன்றுக்கு 75 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கும், சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,17,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், மாலையில் கிராமிற்கு 75 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 1,18,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்வு

வெள்ளி விலையானது நேற்று எந்த வித மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்று 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலையில் கிராமிற்கு 5 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், மாலையில் 5 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் மீண்டும் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Gold Silver Rate Aug.28th: இப்படி ஷாக் கொடுத்துட்டியே.! இன்று மாலையில் கணிசமாக உயர்ந்த தங்கம் விலை; தற்போதைய விலை என்ன.?
PulseNews சுருக்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று காலை சவரனுக்கு 600 ரூபாய் விலை குறைந்து காணப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக இன்று மாலை மீண்டும் சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்துள்ளது நுகர்வோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலையைத் தொடர்ந்து, வெள்ளி விலையிலும் இன்று உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24-ம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் 15,030 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,20,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business