"விஜய் தொகுதியில் 462 அடுக்குமாடி குடியிருப்புகள்..." வீட்டு வசதி வாரியத்தில் மெர்சலான 20 அறிவிப்புகள்

தமிழ்நாட்டில் சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் அமைச்சர் ராஜ்குமார் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

1. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுயநிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 914 கோடியில் 842 அடுக்குமாடிக் குடியிருப்புகள்

2. ரூபாய் 45 கோடியில் 564 மனைகள் மேம்பாடு

3. சென்னை சிஐடி நகரில் சுமார் ரூபாய் 18 கோடியில் 20 குடியிருப்புகள் வாரிய வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும்.

4. அபராத வட்டி தள்ளுபடி திட்டம்; தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தவணைத் திட்டத்தில் 31.03.2026க்குள் தவணை முடிந்தும் நிலுவை வைத்துள்ள சுமார் 7 ஆயிரம் ஒதுக்கீட்டுதாரர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

5. நில உபயோக மாற்ற விண்ணப்பங்கள் இறுதிவரை முழுமையாக இணையவழியில் பரிசீலிக்கப்படும்.

6. சுய சான்றிதழ் கட்டட அனுமதி 5 ஆயிரம் சதுர அடியாக உயர்வு. பரப்பளவு தற்போதுள்ள 3 ஆயிரத்து 500 சதுர அடியில் இருந்து 5 ஆயிரம் சதுர அடியாக உயர்த்தப்படும்.

7.சிறிய வணிகக் கட்டிடங்களுக்கு சுய சான்றளிப்பு மூலம் திட்ட அனுமதி; வணிக கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவதை எளிமைப்படுத்தும் வகையில், 1500 சதுர அடி எஃப்எஸ்ஐ பரப்பளவு வரையிலான கட்டிடங்களுக்கு சுய சான்றளிப்பு முறையில் அனுமதி வழங்கப்படும்.

8. ரூபாய் 20 கோடி மதிப்பில் சாத்தாங்காடு மற்றும் கோயம்பேடு வளாக சாலைகள் மேம்பாடு

9. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூபாய் 7.50 கோடியில் புதிய கடைகள் கட்டப்படும்.

10. சென்னை பெரம்பூரில் ரூபாய் 111.08 கோடியில் 462 அடுக்குமாடி குடியிருப்புகள்

11. நில உரிமை கொண்ட பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்காக 15 ஆயிரம் தனி வீடுகள். ரூபாய் 987.42 கோடியில் 2026-27ம் ஆண்டில் கட்டப்படும்.

12. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள 41 ஆயிரத்து 664 பழைய குடியிருப்புகள் ரூபாய் 96.63 கோடியில் புனரமைக்கப்படும்.

13. ரூபாய் 355 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உட்கட்டமைப்பு மேம்பாடு

14. 3ம் தரப்பு சான்றளிப்பு மூலம் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகம்; பொதுமக்கள் உள்ளாட்சி அலுவலகங்களுக்கு செல்லாமல் எளிதாக கட்டட அனுமதி பெறும் வகையில் 8070 சதுர அடி எஃப்எஸ்ஐ பரப்பளவு வரை உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட 3ம் தரப்பினர் மூலம் கட்டிட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்து, கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும்.

15. வணிக கட்டிடங்களுக்கு 3ம் தரப்பு சான்றளிப்பு மூலம் கட்டிட அனுமதி; 3230 சதுர அடி எஃப்எஸ்ஐ வரை உள்ள வணிக கட்டிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட 3ம் தரப்பினர் மூலம் விதிமுறைகள சரிபார்க்கப்பட்டு, கட்டிட அனுமதி வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.

16. தொழிற்சாலை கட்டிடங்களுக்கு 3ம் தரப்பு சான்றளிப்பு மூலம் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகம்

17. சிறிய குடியிருப்பு கட்டிடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளிலே அனுமதி; மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் குடியிருப்பு கட்டிட அனுமதி வழங்கும் வரம்பு 10 ஆயிரத்தில் இருந்து 16 ஆயிரத்து 140 சதுர அடியாகவும், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் 12 ஆயிரத்து 912 சதுர அடியாகவும் உயர்த்தப்படும்.

18. உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரம் தற்போதுள்ள 2 ஆயிரம் சதுர அடியில் இருந்து 5 ஆயிரத்து 380 சதுர அடியாக உயர்த்தப்படும்.

19. திட்டமில்லா பகுதிகளில் நன்செய் நிலங்களை வேளாண்மை அலு்லாத பயன்பாட்டிற்கு மாற்றும் நடைமுறை எளிமையாக்கம்

20. ரூபாய் 1 கோடியில் டிடிஆர் பரிவர்த்தனைக்கு மின்னனு இணையவழி தளம் உருவாக்கம்

இவ்வாறு அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அமைச்சர் ராஜ்குமார் வீட்டுவசதி வாரியம் குறித்து 20 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, சுயநிதித் திட்டத்தின் கீழ் ரூ.914 கோடி மதிப்பீட்டில் 842 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். மேலும், ரூ.45 கோடி செலவில் 564 மனைகளை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.