மின் கட்டண உயர்வு புகார்: மின்சார வாரியம் அதிரடி உத்தரவு
மின்சாரக் கட்டணத்தில் முந்தைய சுழற்சியைக் காட்டிலும் 20 சதவீதத்திற்கு மேல் உயர்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், அதிகப்படியான மின் கட்டணம் தொடர்பா…
மின்சாரக் கட்டணத்தில் முந்தைய சுழற்சியைக் காட்டிலும் 20 சதவீதத்திற்கு மேல் உயர்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், அதிகப்படியான மின் கட்டணம் தொடர்பாக வரும் புகார்களை விரிவாக ஆய்வு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, முந்தைய கட்டணத்தை விட 20 சதவீதத்திற்கு மேல் உயர்வு இருந்தால், அந்தத் தொகையை வசூலிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும், கட்டண உயர்வு தொடர்பான புகார்களைச் சரிசெய்ய மின்சார வாரிய ஊழியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அறிவித்துள்ள இந்த மறுஆய்வு நடவடிக்கைகளை, பொதுமக்களில் பலர் வெறும் கண்துடைப்பு நாடகமாகவே கருதுகின்றனர். அரசின் இந்த அறிவிப்பு குறித்து மக்கள் தங்கள் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.