சட்டமன்றத்தின் கடைசி நாளில் நெகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை தாக்கல் தொடங்கி 28 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரின் இறுதி நாளில், பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தனது வாழ்வின் சுவாரஸ…

தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை தாக்கல் தொடங்கி 28 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரின் இறுதி நாளில், பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தனது வாழ்வின் சுவாரஸ்யமான மற்றும் நெகிழ்ச்சியான கடந்த கால அனுபவம் ஒன்றை சபையில் உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
தான் லயோலா கல்லூரியில் பயின்று கொண்டிருந்த காலத்தில், ஒரு அதிகாரியைச் சந்திக்கும் பணிக்காக சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார். அப்போது சபை நடந்துகொண்டிருந்த நிலையில், சபையை ஒருமுறை எட்டிப் பார்ப்பதற்கு அவர் அனுமதி கோரியுள்ளார். ஆனால், சபை நடந்து கொண்டிருந்த காரணத்தால் அந்த அனுமதி அவருக்கு மறுக்கப்பட்டது.
அன்று சட்டசபை நடக்கும் இடத்தை எட்டிப் பார்ப்பதற்குக் கூட அனுமதி கிடைக்காத அதே இடத்திற்கு, இன்று பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சபையை வழிநடத்துவது தனக்கு மிகுந்த நெகிழ்ச்சியைத் தருவதாக ஜே.சி.டி. பிரபாகர் தனது உரையில் நினைவு கூர்ந்தார்.