சென்னையின் இரண்டாவது விமான நிலையம்: செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் தீவிர பரிசீலனை
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான மாற்று இடங்களாக செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் திர…

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான மாற்று இடங்களாக செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மணல்லூர் ஆகிய பகுதிகள் தற்போது தீவிர பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய விமான நிலையத்தை கும்மிடிப்பூண்டி பகுதியில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி தேர்வு செய்யப்படும் பட்சத்தில், அப்பகுதி பெரும் பொருளாதார ரீதியான பயன்களை அடையும் என்பதால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக அந்த மாவட்ட மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.