சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு: புதிய விதிமுறைகள் அமல்
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான நடைமுறைகளில் அரசு புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு இடையே இனி 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்…

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான நடைமுறைகளில் அரசு புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு இடையே இனி 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
முன்பு மேற்கு ஆசியாவில் நிலவிய மோதல் சூழலால் ஏற்பட்ட விநியோக பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, கடந்த பிப்ரவரி மாதம் சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளிகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில், நகர்ப்புறங்களில் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் முன்பதிவு நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
தற்போது இந்த கட்டுப்பாடுகளில் திருத்தம் செய்யப்பட்டு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் பொதுவான விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற வாடிக்கையாளர்கள் இனி 45 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், அனைத்து நுகர்வோர்களும் இந்த புதிய 25 நாட்கள் இடைவெளி விதியை கவனத்தில் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.