தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் நவம்பர் 5-ம் தேதி சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று தொடங்கியது. ம…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் நவம்பர் 5-ம் தேதி சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய மிகக் குறுகிய காலத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விறுவிறுப்பாக விற்றுத் தீர்ந்துவிட்டன.
டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நேரத்தில், இணையதளத்தில் அதிகப்படியான பயனர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதள சேவை முடங்கியது. இதனால் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகளைப் பெறுவதில் பயணிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர்.
டிக்கெட்டுகள் அனைத்தும் சில நிமிடங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டு தீர்ந்துவிட்ட நிலையில், தங்களுக்குத் தேவையான டிக்கெட்டுகள் கிடைக்காத பல பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.