மீண்டும் உச்சத்தை நோக்கி நகரும் தங்கம் விலை: வெள்ளி விலையில் மாற்றமா? இன்றைய நிலவரம்
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை மாற்றம் செய்யப்பட்டது. காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் அதிரடியாக உயர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200க்கும், சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றும் (ஆகஸ்ட் 15) தங்கம் விலை மேலும் கணிசமாக உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரம்: 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,420-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,000-க்கும் விற்பனையாகிறது. இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து நிலையாக நீடிக்கிறது. அதன் படி, வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் (2 லட்சத்து 55 ஆயிரம்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலையில் மாற்றங்கள் நிலவி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760-க்கு விற்பனையான தங்கம், நேற்று காலையில் ரூ.1,440 குறைந்து ரூ.1,12,320-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
நேற்று ஒரே நாளில் தங்கம் விலை இருமுறை மாற்றங்களைச் சந்தித்தது. காலையில் விலை குறைந்த நிலையில், மாலை நிலவரப்படி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.14,200-க்கு விற்பனையானது.