LIVE | Kerala Lottery Result Today (27.08.2026): கேரளா காருண்யா லாட்டரி; இன்னிக்கு கோடியா தெருக்கோடியா?

கேரளா லாட்டரி குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த குலுக்கல் தொடங்குகிறது. கேரள லாட்டரித் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மிகவும் வெளிப்படையான முறையில் இயந்திரம் மூலம் இக்குலுக்கல் நடத்தப்பட உள்ளது.

கேரளா லாட்டரி சீட்டுகள் சாதாரணமான காகிதத்தில் அச்சடிக்கப்படுவதில்லை. இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு இணையான மிகக் கடுமையான பாதுகாப்பு அம்சங்களுடன், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் மைய அச்சகத்தில் மட்டுமே இவை மிகுந்த பாதுகாப்புடன் அச்சடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு டிக்கெட்டிலும் போலி செய்ய முடியாத ரகசிய பார்கோடுகள் மற்றும் வாட்டர்மார்க் உள்ளன. இதனால் லாட்டரியை டூப்ளிகேட் செய்வது சாத்தியமே இல்லை.

இன்றைய டிஜிட்டல் உலகில் பல குலுக்கல்கள் கம்ப்யூட்டர் மூலம் நடக்கின்றன. ஆனால், கேரளா லாட்டரி குலுக்கல் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்க, கம்ப்யூட்டரை நம்புவதில்லை. ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் அடங்கிய ஒரு குழுவின் முன்னிலையில் பிரத்யேக மெக்கானிக்கல் இயந்திரத்தின் மூலம் நேரடியாக சுழற்றப்பட்டு ஒவ்வொரு எண்ணாகக் குலுக்கல் முறையில் எடுக்கப்படுகிறது.

கோரப்படாத பரிசுத்தொகை

பல நேரங்களில் லாட்டரியில் வெற்றி பெற்றவர்கள் தாங்கள்தான் வெற்றி பெற்றோம் என்றே தெரியாமல் இருப்பார்கள் அல்லது டிக்கெட்டை தொலைத்திருப்பார்கள். இப்படி உரிமை கோரப்படாத பல நூறு கோடி ரூபாய் என்னவாகும் தெரியுமா? அந்தப் பணம் முழுமையாக அரசு கருவூலத்திற்குத் திரும்பச் சென்று, 'காருண்யா' போன்ற திட்டங்கள் வாயிலாக ஏழை மக்களின் இலவச மருத்துவ சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், கேரள மாநில லாட்டரித் துறையின் காருண்யா பிளஸ் லாட்டரிக்கான அதிர்ஷ்ட குலுக்கல் இன்று (ஆகஸ்ட் 27) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

முதல் பரிசு ஒரு கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டால், அந்த முழு தொகையும் அப்படியே கையில் கிடைக்காது. வருமான வரி (30%), லாட்டரி ஏஜென்ட் கமிஷன் (10%) போன்ற வரிகள் பிடித்தம் போக மீதமுள்ள தொகை மட்டுமே வெற்றியாளருக்குக் கிடைக்கும்.

இந்த லாட்டரி திட்டம் வெறும் லாப நோக்கம் கொண்டது மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களின் குடும்பங்களை வாழ வைக்கும் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.

இன்று பிற்பகல் குலுக்கல் நிறைவடைந்தவுடன், அதிகாரப்பூர்வ முடிவுகள் கேரள லாட்டரித் துறையின் இணையதளங்களான statelottery.kerala.gov.in மற்றும் keralalotteries.com ஆகியவற்றில் வெளியிடப்படும். வெற்றி பெற்றோர் விவரங்களை இங்கே இணைந்து அறியலாம்.

திருவனந்தபுரத்தில் உள்ள கார்க்கி பவனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. கேரள லாட்டரி துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், இயந்திரம் மூலம் வெளிப்படையான முறையில் இந்த குலுக்கல் நடத்தப்படுகிறது.
கேரள லாட்டரி சீட்டுகள் சாதாரண காகிதத்தில் அச்சிடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் லாட்டரி முடிவுகளைப் பற்றிய கூடுதல் விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும்.