PulseNews
வணிகம்

காலை குறைந்தது... பிற்பகலில் மீண்டும் சரிந்தது...! தங்கம் விலையில் இன்று அதிரடி மாற்றம்...!

தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது நகை வாங்க காத்திருப்போருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,080-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.இந்த நிலையில், இன்று காலையிலேயே தங்கம் விலை மீண்டும் சரிந்தது. சவரனுக்கு ரூ.560-ம், கிராமுக்கு ரூ.70-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,520-க்கும், ஒரு கிராம் ரூ.14,940-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து, இன்று பிற்பகலில் தங்கம் விலையில் மீண்டும் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 2-வது முறையாக விலை குறைந்ததால், நகை வாங்குவோர் மத்தியில் கவனம் அதிகரித்துள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் சவரனுக்கு ரூ.1,720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.215 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதன் மூலம் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு மொத்தமாக ரூ.2,280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளியைப் பொறுத்தவரை இன்று விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை ஒரே நாளில் அடுத்தடுத்து சரிவை சந்தித்துள்ள நிலையில், நகை வாங்குவோரின் கவனம் இன்றைய விலை நிலவரத்தின் மீது திரும்பியுள்ளது.

Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
காலை குறைந்தது... பிற்பகலில் மீண்டும் சரிந்தது...! தங்கம் விலையில் இன்று அதிரடி மாற்றம்...!
PulseNews சுருக்கம்

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நேற்று மாற்றமின்றி காணப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.560-ம், கிராமுக்கு ரூ.70-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,520-க்கும், ஒரு கிராம் ரூ.14,940-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்றைய பிற்பகல் வேளையிலும் தங்கம் விலையில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#business