PulseNews
வணிகம்

5 வருஷ எஃப்.டி திட்டம்: எந்த பேங்க்ல அதிக லாபம் கிடைக்கும் தெரியுமா? மூத்த குடிமக்களுக்கு செம வட்டி

மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டு நிரந்தர வைப்பு திட்டம் (FD) என்பது குறைந்த ஆபத்தில் நிலையான வருமானம் பெறுவதற்கான பிரபலமான முதலீட்டு வழியாக உள்ளது. குறிப்பாக ஓய்வுக்கால சேமிப்பை பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு வங்கி எஃப்.டி. முக்கியத் தேர்வாக இருக்கிறது. ஒரே தொகையை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தாலும், வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தில் சிறிய வித்தியாசம் இருந்தால்கூட, இறுதியில் கிடைக்கும் முதிர்வுத் தொகையில் மாற்றம் ஏற்படும். தற்போதைய வட்டி விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு, ரூ.5 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் மூத்த குடிமக்களுக்கு எந்த வங்கியில் எவ்வளவு தொகை கிடைக்கும்? என்பதைப் பார்க்கலாம். ஆக்சிஸ் வங்கி ஆக்சிஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு FD-க்கு 7.25% வட்டி வழங்குகிறது. ரூ.5 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் சுமார் ரூ.7,16,130 கிடைக்கும். இதில் கிடைக்கும் மொத்த வட்டி சுமார் ரூ.2,16,130. இந்த பட்டியலில் 5 ஆண்டு எஃப்.டி-க்கு அதிக வட்டி வழங்கும் வங்கியாக ஆக்சிஸ் வங்கி உள்ளது. எஸ்பிஐ ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு FD-க்கு 7.05% வட்டி வழங்குகிறது. இதில் எஸ்.பி.ஐ. வி கேர் (SBI We-care) திட்டத்தின் கீழ் கூடுதல் 0.50% வட்டி உள்ளிட்ட சலுகைகள் பொருந்தும். ரூ.5 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், சுமார் ரூ.7,09,129 முதிர்வுத் தொகையாக கிடைக்கும். இதில் மொத்த வட்டி வருவாய் சுமார் ரூ.2,09,129. ஐசிஐசிஐ வங்கி ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு FD-க்கு 7.10% வட்டி வழங்குகிறது. ரூ.5 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், சுமார் ரூ.7,10,873 முதிர்வுத் தொகை கிடைக்கும். இதன் மூலம் கிடைக்கும் மொத்த வட்டி சுமார் ரூ.2,10,873. பஞ்சாப் நேஷனல் வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டு FD-க்கு 6.80% வட்டி வழங்குகிறது. ரூ.5 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், முதிர்வில் சுமார் ரூ.7,00,469 கிடைக்கும். இதில் மொத்த வட்டி வருவாய் சுமார் ரூ.2,00,469. கனரா வங்கி கனரா வங்கி மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு எஃப்.டி-க்கு 6.75% வட்டி வழங்குகிறது. ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் ரூ.6,98,749 கிடைக்கும். இதில் கிடைக்கும் மொத்த வட்டி சுமார் ரூ.1,98,749. ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஹெச்.டி.எஃப்.சி வங்கி மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டு FD-க்கு 6.65% வட்டி வழங்குகிறது. ரூ.5 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், முதிர்வுத் தொகை சுமார் ரூ.6,95,322 ஆக இருக்கும். இதில் கிடைக்கும் மொத்த வட்டி சுமார் ரூ.1,95,322. ரூ.5 லட்சத்திற்கு எந்த வங்கியில் அதிக முதிர்வுத் தொகை? இந்த கணக்கீட்டின்படி, 5 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு ஆக்சிஸ் வங்கியில் சுமார் ரூ.7.16 லட்சம் முதிர்வுத் தொகை கிடைக்கும். அடுத்ததாக ஐசிஐசிஐ வங்கியில் சுமார் ரூ.7.11 லட்சமும், எஸ்பிஐயில் சுமார் ரூ.7.09 லட்சமும் கிடைக்கும். அதேபோல், பிஎன்பி, கனரா வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியில் முறையே சுமார் ரூ.7.00 லட்சம், ரூ.6.99 லட்சம் மற்றும் ரூ.6.95 லட்சம் கிடைக்கும். இதனால், வட்டி விகிதத்தில் 0.50% அல்லது அதற்கும் குறைவான வித்தியாசம் இருந்தாலும், ரூ.5 லட்சம் போன்ற பெரிய தொகையை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும்போது இறுதியில் கிடைக்கும் தொகையில் ஆயிரக்கணக்கான ரூபாய் வித்தியாசம் ஏற்படலாம். முக்கிய குறிப்பு மேற்கண்ட முதிர்வுத் தொகைகள் தோராயமானவை மற்றும் விளக்கத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. உண்மையான வட்டி வருவாய், வட்டி கணக்கிடப்படும் முறை, எஃப்.டி. வகை, வங்கி விதிமுறைகள் மற்றும் முதலீட்டு தேதியைப் பொறுத்து மாறுபடலாம். FD-யில் முதலீடு செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட வங்கியின் தற்போதைய வட்டி விகிதம் மற்றும் விதிமுறைகளை சரிபார்ப்பது அவசியம். மேலும், எஃப்.டி. மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு பொருந்தக்கூடிய வரி விதிகளையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
5 வருஷ எஃப்.டி திட்டம்: எந்த பேங்க்ல அதிக லாபம் கிடைக்கும் தெரியுமா? மூத்த குடிமக்களுக்கு செம வட்டி
PulseNews சுருக்கம்

ஓய்வுக்கால சேமிப்பைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்பும் மூத்த குடிமக்களுக்கு, 5 ஆண்டுகால நிரந்தர வைப்புத் திட்டம் (FD) குறைந்த ஆபத்துடன் நிலையான வருமானம் தரும் சிறந்த வழியாகும். பல்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களில் சிறிய மாற்றம் இருந்தாலும், அது முதிர்வுத் தொகையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், முதலீட்டாளர்கள் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமாகும்.

தற்போதைய வட்டி விகிதங்களின் அடிப்படையில், ரூ. 5 லட்சம் முதலீடு செய்தாலோ அல்லது திட்டங்களைத் தேர்ந்தெடுத்தாலோ கிடைக்கும் லாபத்தை அறிந்து முதலீடு செய்வது சிறந்தது. அதிக வட்டி வழங்கும் வங்கிகளைத் தெரிவு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் தங்கள் சேமிப்பிலிருந்து அதிக பலனைப் பெற முடியும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business