மாதம் ரூ.600 செலுத்தினால் ரூ.1 லட்சம் பெறலாம் – ஸ்டேட் வங்கியின் சேமிப்பு திட்டம்
SBI Savings Scheme : ஸ்டேட் வங்கியின் ஹர் கர் லக்பதி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி,குறிப்பிட்ட காலத்தில் மிகப்பெரிய தொகையை சேமிக்கலாம். வாடிக்கையாளர்கள் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை தங்களுக்கு விருப்பமான தேர்வு காலத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஸ்டேட் வங்கியின் 'ஹர் கர் லக்பதி' சேமிப்புத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.600 முதலீடு செய்வதன் மூலம் முதிர்வு காலத்தில் ரூ.1 லட்சம் வரை பெற முடியும். இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை தங்களுக்கு விருப்பமான கால அளவைத் தேர்வு செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
மாதாந்திர சேமிப்பின் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெரிய தொகையை ஈட்ட இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப சேமிப்புக் காலத்தைத் தீர்மானித்துக்கொள்ளலாம்.