தமிழகத்தில் தொழில் தொடங்க தற்போது சாதகமான சூழல் - முதலீட்டாளர்
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தற்போது சாதகமான நிலையும், எளிதில் அதிகாரிகளை அணுகக் கூடிய சூழலும் உள்ளதாக முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் பல்வேறு புதிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில், தொழில் தொடங்குவதற்ககு 21 நாட்களில் அனுமதியளிக்கும் டீம்டு அப்ரூவல் ((deemed approval)) முறை ஏற்கனவே பெயரளவில் இருந்தாலும் தற்போது கண்டிப்பாக பின்பற்றப்படுவதாக தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு தற்போது மிகவும் சாதகமான சூழல் நிலவுவதாகவும், அரசு அதிகாரிகளை எளிதாக அணுக முடிவதாகவும் முதலீட்டாளர்கள் பாராட்டியுள்ளனர். சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு புதிய நிறுவனங்கள் முதலீடு செய்வது தொடர்பான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொழில் தொடங்குவதற்கான அனுமதி வழங்கும் 'டீம்டு அப்ரூவல்' (deemed approval) முறை, முன்னதாக பெயரளவில் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது முறையாகவும் கண்டிப்பாகவும் பின்பற்றப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 21 நாட்களுக்குள் அனுமதி வழங்கும் இந்த நடைமுறை தொழில் தொடங்க உகந்த சூழலை உருவாக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.