TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..

டாஸ்மாக்கில் மது விற்பனை- கொட்டும் வருவாய்

நவ நாகரீக காலத்தில் மது குடிப்பதையே ஸ்டைலாக மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒளிந்து ஒளிந்து மது குடித்த காலம் மாறி மது குடித்தால் தான் கெத்து என்ற நிலை உருவாகி வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதில் நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் போலியான சரக்குகள் விற்பனை செய்யப்படுவதாகவும், மதுபானத்தில் கலப்படம் செய்யப்படுவதாகவும் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், FSSAI மதுபான தொழிற்சாலைகளில் தொடர் சோதனையானது மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் உள்ள என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் FSSAI- ஆய்வை நடத்தியது

மதுபான தொழிற்சாலையில் FSSAI ஆய்வு

இந்த ஆய்வை தொடர்ந்து விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் 11 வகையான மதுபானங்களை விற்பனை செய்ய தடை செய்து FSSAI உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கே. நந்தகுமார் வெளியிட்டுள்ள உத்தரவில், மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள் மற்றும் கிடங்கு மேலாளர்கள், மறு அறிவிப்பு வரும் வரை, சில்லறை விற்பனைக் கடைகளில் குறிப்பிட்ட 11 பிராண்டுகளின் பரிமாற்றம் மற்றும் விற்பனையை நிறுத்தவும், மேலும் FL2 மற்றும் FL3 உரிமதாரர்களுக்கு விற்பனையை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் என்ரிகா எண்டர்பிரைசஸ் லிமிடெட், டாஸ்மாக் நிறுவனத்திற்கு 20-க்கும் மேற்பட்ட மது வகைகள் மற்றும் பிராண்டுகளை வழங்குகிறது. தற்போது 11 பிராண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது.

எந்த எந்த சரக்குகளுக்கு தடை

1.விஎஸ்ஓபி எக்ஷா கோல்ட் பிராந்தி (VSOP EXSHAW GOLD BRANDY)
2.லூயிஸ் வெர்னன்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி (LOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY)
3.மெக்டொவல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி (Mc Dowells VSOP Brandy (Blended Brandy)
4.நம்பர் 1 மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி (NO.1 McDowells Fine Brandy (Indian Brandy)
5.மென்ஸ்கிளப் டீலக்ஸ் பிராந்தி (MENSCLUB Deluxe Brandy (Indian Brandy))
6.ஹனி பீ ஃபைன் பிராந்தி(HONEY BEE FINE Brandy (Indian Brandy)
7.என்ரிகா விஎஸ்ஓபி செலக்ட் பிராந்தி (ENRICA VSOP SELECT BRANDY)
8.என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி (ENRICA PLATINUM RESERVE XO BRANDY)
9.என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி (ENRICA PREMIUM FRENCH BRANDY)
10.வீரன் ஸ்பெஷல் பிராந்தி (VEERAN SPECIAL BRANDY)
11.என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் (ENRICA OLD INDIE CLASSIC DARK RUM)

தடை செய்ய காரணம் என்ன.?

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்திய ஆய்வில், என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்புகளில் இயற்கை சுவைக்கு மாறாக செயற்கை சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில், நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டப்படுகிறது. இச்சூழலில், போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மதுவில் கலப்படம் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் 11 வகையான மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி குறிப்பிட்ட இந்த மது ரகங்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.