PulseNews
வணிகம்

இந்திய நோட்டுகளைப் பயன்படுத்த அனுமதி; நேபாள வங்கி அறிவிப்பு

இந்தியாவின் ரூ.200 மற்றும் ரூ.500 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று நேபாள அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில், சுற்றுலா என்பது அந்நாட்டின் வருவாயில் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடிய ஒன்றாகும். இதில், அதிக அளவிலான இந்தியச் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டிற்கு அதிகம் வருகை தருகின்றனர். எனவே, அந்நாட்டில் இந்திய மற்றும் நேபாள மக்கள் இந்திய ரூபாய் நோட்டுகளை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, இந்தியாவில் 500 மட்டும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன. இதையடுத்து, நேபாளத்திலும் அதிக மதிப்பு கொண்ட இந்திய ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன. ஆனால், தற்போது இந்தியாவின் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த நேபாள ராஷ்டிர வங்கி அனுமதியளித்துள்ளது. அதன்படி, ’2016 நவம்பர் 9க்கு பிறகு பிறகு வெளியிடப்பட்ட இந்திய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ரூபாய் 25 ஆயிரம் வரை கொண்டு செல்லலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, நேபாளத்திற்குச் சுற்றுலா நிமித்தமாக வரும் இந்திய மக்கள் மற்றும் இந்தியாவுடன் வர்த்தகம் சார்ந்து செயல்பட்டு வரும் நேபாள மக்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அதே போல, மற்ற நாடுகளில் இருந்து 5 ஆயிரம் டாலர் வரையிலான நாணயத்தை நேபாளத்திற்குள் கொண்டு வரலாம் என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இந்திய நோட்டுகளைப் பயன்படுத்த அனுமதி; நேபாள வங்கி அறிவிப்பு

இந்தியாவின் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்த அந்நாட்டு மத்திய வங்கி அனுமதி அளித்துள்ள நிலையில், பயணிகள் தலா 25,000 ரூபாய் வரை கையில் வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற நாடுகளிலிருந்து வருபவர்கள் 5,000 டாலர் வரையிலான அந்நிய செலாவணியைக் கொண்டு வரவும் அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மூலம்: Nakkheeran
#business