உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில்1-ந் தேதி முதல் கட்டணம் அதிரடியாக உயர்வு..!
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி செய்தி: செங்குறிச்சி சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1 முதல் கார், ஜீப், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்க கட்டணம் உயர்வு, ஓட்டுநர்களுக்கு அதிர்ச்சி. Ulundurpet toll plaza news: From September 1, toll fees at Sengurichi plaza hiked by Rs 5–20 for cars, jeeps, lorries, buses and multi-axle vehicles, shocking regular motorists.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார், ஜீப், லாரி மற்றும் பேருந்து உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களுக்கும் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
இந்த மாற்றத்தின் மூலம் வாகனங்களுக்கு தலா ரூ.5 முதல் ரூ.20 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு அந்த வழியாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.