வெறும் ரூ.50,000 -ல் தாய்லாந்து ட்ரிப்... ஐ.ஆர்.சி.டி.சி மெகா அறிவிப்பு; எத்தனை நாட்கள் தெரியுமா?
சுற்றுலாப் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வெளியாகி உள்ளது. இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) நிறுவனம் கொல்கத்தாவிலிருந்து தாய்லாந்திற்கு 6 நாட்கள் கொண்ட சிறப்புச் சுற்றுலாத் திட்டத்தை அறிவித்துள்ளது. ஒரு நபருக்கு ரூ.49,500 என்ற குறைந்த கட்டணத்தில் தொடங்கும் இந்தச் சுற்றுலாத் திட்டத்தில் விமானக் கட்டணம், தங்குமிடம், உணவு மற்றும் சுற்றுலா இடங்களைப் பார்வையிடுதல் உள்ளிட்ட பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. விமானமும் வேண்டாம், கப்பலும் வேண்டாம்... வெறும் 6 நிமிஷத்துல ரஷ்யா போகலாம்; அமெரிக்காவை திரும்பி பார்க்க வைத்த சீனாவின் பிரம்மாண்டம் பயணத் திட்டத்தின் முக்கிய விவரங்கள் பயணக் காலம்: 2026 நவம்பர் 12 முதல் நவம்பர் 17 வரை (5 இரவுகள், 6 நாட்கள்). பயணப் பாதை: கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள டான் முவாங் சர்வதேச விமான நிலையத்திற்குத் தாய் லயன் ஏர் (Thai Lion Air) விமானம் மூலம் பயணம் நடைபெறும். பார்வையிடும் இடங்கள்: பாங்காக் (Bangkok) மற்றும் பட்டாயா (Pattaya). கட்டண விவரங்கள் மூன்று பேர் பகிரும் அறை (Triple Sharing): ரூ.49,500 இருவர் பகிரும் அறை (Double Sharing): ரூ.61,300 தனி நபர் அறை (Single Occupancy): ரூ.57,000 குழந்தைகளுக்கான கட்டணம் (Child Fare): ரூ.30,300 (கட்டிலுடன் அல்லது கட்டில் இல்லாமல்) தொகுப்புக் கட்டணத்தில் 5% ஜி.எஸ்.டி சேர்க்கப்பட்டுள்ளது. முன்பதிவின் போது 2% டி.சி.எஸ் தனியாகச் செலுத்த வேண்டும். பான் கார்டு விவரங்கள் கட்டாயமாகும். 6 நாட்கள் பயண முழு விவரம் நாள் 1: பாங்காக் வந்தடைந்ததும் நேரடியாக பட்டாயா பயணம். ஹோட்டல் செக்-இன் மற்றும் காலை உணவுக்குப் பின் டைகர் பார்க் (Tiger Park) பயணம். மாலையில் புகழ்பெற்ற 'அல்காஸார் ஷோ' (Alcazar Show) மற்றும் இந்திய உணவகத்தில் இரவு உணவு. நாள் 2: ஸ்பீட்போட் (Speedboat) மூலம் கோரல் தீவு (Coral Island) பயணம். மதிய உணவிற்குப் பின் ஜெம்ஸ் கேலரி (Gems Gallery) சென்று வருதல். நாள் 3: பாங்காக் நகருக்குத் திரும்புதல். மார்பிள் புத்தா மற்றும் கோல்டன் புத்தா ஆலயங்களைத் தரிசித்த பின், இரவில் சாவோ பிராயா ஆற்றுப் படகுப் பயணம் (Chaophraya River Cruise) மற்றும் இரவு உணவு. நாள் 4: நாள் முழுதும் சஃபாரி வேர்ல்ட் மற்றும் மரைன் பூங்காவில் (Safari World & Marine Park) பொழுதுபோக்கு. நாள் 5 & 6: சீ லைஃப் பாங்காக் ஓஷன் வேர்ல்ட் (SEA LIFE Bangkok Ocean World) பார்வையிடுதல். நேரமிருந்தால் ஷாப்பிங் செய்த பின், தாயகம் திரும்புவதற்காக பாங்காக் விமான நிலையத்திற்குச் செல்லுதல். கட்டணத்தில் சேர்க்கப்பட்டுள்ளவை மற்றும் சேர்க்கப்படாதவை சேர்க்கப்பட்டுள்ளவை: இருவழி விமானக் கட்டணம், 3-நட்சத்திர ஹோட்டலில் 5 இரவுகள் தங்குமிடம், 5 காலை உணவு, 5 மதிய உணவு, 4 இரவு உணவு, சுற்றுலா இடங்களுக்கான நுழைவுச் சீட்டுகள், பயணக் காப்பீடு மற்றும் உள்ளூர் வழிகாட்டி. சேர்க்கப்படாதவை: விசா கட்டணம் (Visa on Arrival THB 2,000), 2% டி.சி.எஸ், விமானத்தில் உணவு, சீட் தேர்வு, டிப்ஸ் மற்றும் தனிப்பட்ட செலவுகள். பயணிகள் தங்களின் பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாகும் வகையில் வைப்பதுடன், தேவையான நிதிக்கான சான்றுகள் மற்றும் தாய்லாந்து டிஜிட்டல் வருகை அட்டையை (TDAC) தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சுற்றுலாப் பயணிகளுக்காக இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொல்கத்தாவிலிருந்து தாய்லாந்துக்கு 6 நாட்கள் கொண்ட சிறப்புச் சுற்றுலாத் திட்டத்தை அந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு ஒரு நபருக்கு ரூ.49,500 என குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் விமானக் கட்டணம், தங்குமிடம், உணவு மற்றும் சுற்றுலா இடங்களைப் பார்வையிடுவதற்கான வசதிகள் அனைத்தும் அடங்கும்.