PulseNews
வணிகம்

டாஸ்மாக் பார்களில் ஐ.எஸ்.ஐ தரச் சான்று கட்டாயம்: விதிகளை மீறினால் ஒப்பந்தம் ரத்து; தமிழக அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் தற்போது சுமார் 4,000 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் அரசுக்குத் தினந்தோறும் ரூ.100 முதல் ரூ.150 கோடி வரை வருவாய் கிடைத்து வருகிறது. பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகைக் காலங்களில் விற்பனை இருமடங்காக அதிகரிக்கும். இந்நிலையில், புதிதாகப் பதவியேற்றுள்ள த.வெ.க. அரசு டாஸ்மாக் முறையில் பல்வேறு சீர்திருத்தங்களையும் கட்டுப்பாடுகளையும் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. இதன் முதற்கட்டமாக, பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் அமைந்திருந்த 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்குக் கூடுதல் பணம் வசூலிப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை 25% உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இனிமேல் வாடிக்கையாளர்களிடம் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையாக, டாஸ்மாக் பார்களுக்குப் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன: *பார்களில் பீடி, சிகரெட் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட எந்தவொரு புகையிலைப் பொருட்களையும் விற்பனை செய்யக் கூடாது. *ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கி எறியக்கூடிய (Single-use plastics) மட்காத பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. *பார்களில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் உணவுப் பொருள் தரக்கட்டுப்பாடு (FSSAI) சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். *ஒப்பந்ததாரர்கள் தின்பண்டங்களுக்கான விலைப்பட்டியலை (Price List) வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். *குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் அனைத்தும் கட்டாயம் ISI தரச்சான்று பெற்றவையாக மட்டுமே இருக்க வேண்டும் *மதுக்கூடங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைக்கக் கூடாது. ஓலைக் கூரைகள் அல்லது கீற்றுக் கொட்டகைகளைப் பார்களாகப் பயன்படுத்தக் கூடாது. *டாஸ்மாக் நிர்வாகம் நிர்ணயித்துள்ள வேலை நேரங்களில் மட்டுமே பார்கள் செயல்பட வேண்டும். *அரசு விடுமுறை நாட்களிலோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டோ பார்களைத் திறந்து வைத்திருந்தால், அவர்களின் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும் மற்றும் காப்புத் தொகை (Security Deposit) திரும்பத் தரப்பட மாட்டாது. இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் பார்களின் உரிமையாளர்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகளை மீறிச் செயல்படும் மதுபான பார்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனடியாகப் பார்களுக்குச் சீல் வைக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business