தனியார் மயத்தை கைவிடுக... அரசாணைகளை ரத்து செய்க; திருச்சியில் சி.ஐ.டி.யு ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒப்பந்தப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது மற்றும் அரசாணைகள் 10, 139, 152 ஆகியவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலால்குடி, மணப்பாறை, முசிறி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கோஷமிட்டுத் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர். தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நிரந்தரப் பணிகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். ஒப்பந்தப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்து குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். அரசாணை எண் 10, 139, 152 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் அனைத்துப் பிரிவு ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி (அரசாணை 2 (D) 62, நாள்: 11.10.2017) தூய்மைப் பணியாளர்கள், டி.பி.சி. ஊழியர்கள், ஓட்டுநர்கள், எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள் மற்றும் கணினி இயக்குபவர்களுக்கு உரிய குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் டி.பி.சி. பணியாளர்களுக்குத் தொடர்ச்சியாகப் பணி வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்திற்கு மாற்றாக, தினந்தோறும் ரூ.100 உணவுப்படி வழங்க வேண்டும். உள்ளாட்சித் தொழிலாளர்கள் அனைவருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையிலான வாரிசுப் பணியைக் காலதாமதமின்றி வழங்க வேண்டும். அரசு அறிவித்த கொரோனா ஊக்கத்தொகை ரூ.15,000 தொகையை விடுபடாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை சி.ஐ.டி.யு. திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் சம்பத் துவக்கி வைத்தார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளன மாநிலச் செயலாளர் மணிமாறன், பி.ஹெச்.இ.எல். சி.ஐ.டி.யு. சங்க பொதுச்செயலாளர் பரமசிவம், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் தியாகராஜன், சி.ஐ.டி.யு. உள்ளாட்சிச் சங்க நிர்வாகிகள் எஸ்.கே. செல்வராஜ், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் சிவானந்தம், நகராட்சி செயலாளர்கள் லால்குடி மகாமுனி, மணப்பாறை அனிதா, முசிறி முத்து ஆகியோர் பேசினர். இந்தக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த இலால்குடி, மணப்பாறை, முசிறி, காட்டுப்புத்தூர், கூத்தையார், துவாக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நகராட்சி, பேரூராட்சி சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →