இராமநாதபுரம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.51.5 கோடி திட்டம் மாவட்டத்திற்கு வளர்ச்சியை கொடுக்கும் !

விளையாட்டு அகாடமி மற்றும் முதலமைச்சர் மினி விளையாட்டு அரங்கம் பணிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு.

ரூ.49 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடம்

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பிரப்பன்வலசை ஊராட்சியில் விளையாட்டு அகாடமி ரூ.49 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடத்தை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, விளையாட்டு அகாடமிக்கு தேவையான மின் இணைப்பு மற்றும் மின் வசதிகள் போதுமான அளவில் இல்லாதது குறித்து கேட்டறிந்தனர். மேலும், தேவையான மின் இணைப்பை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

முதலமைச்சர் மினி விளையாட்டு அரங்கம் ரூ.2.50 கோடி

மேலும் முதலமைச்சர் மினி விளையாட்டு அரங்கம் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, வரும் பணிகளை பார்வையிட்டு. இவ்விளையாட்டு அரங்கில் உடற்பயிற்சிக் கூடம், அலுவலகம், அறைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் சுமார் 1,284 சதுர அடி பரப்பளவில் கட்டட வசதிகளும், அமைக்கப்பட உள்ளன. மேலும் முகப்பு பகுதியில் "முதலமைச்சர் மினி விளையாட்டு அரங்கம்” என்ற பெயர் இடம்பெறும் வகையில் மைதானம் அமைய உள்ளது. இவ்வளாகத்தில் ஜிம், பீச் வாலிபால், கோ-கோ, கபடி, விளையாட்டுகளுக்கான வசதிகள் மற்றும் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோ-கோ, கபடி, மற்றும் பீச் வாலிபால் மைதானங்கள் தயார் நிலையில் உள்ளன. அவற்றில் தேவையான கம்பங்கள் (போஸ்ட்கள்) மட்டும் பொருத்தப்பட வேண்டியுள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.தினேஷ்குமார் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரப்பன்வலசை ஊராட்சியில், 49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு அகாடமி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுமானப் பணிகளை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் வகையில் மொத்தம் 51.5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் மினி விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டு அகாடமி தொடர்பான இந்தப் பணிகள், இப்பகுதியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.