மதுரையில் நடக்கும் ரூ.69 கோடி மதிப்பிலான பணிகள்.. இனி மழை நீர் வேகமெடுத்தாலும் கவலை இல்லை !

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தசு. வெங்கடேசன் அவர்கள் பந்தல்குடி கால்வாயில் ரூ.69.21 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு.

வெள்ளத் தடுப்பு பக்கவாட்டுச் சுவர்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, ஆகியோர் இன்று (26.08.2026) மதுரை மாவட்டம், வடக்கு வட்டம், செல்லூர் கண்மாயின் பந்தல்குடி கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு பக்கவாட்டுச் சுவர் (இடதுபுறக் கலிங்கிலிருந்து வைகை ஆறு வரை) புனரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கால்வாயின் இருபுறமும் வெள்ளத் தடுப்பு பக்கவாட்டுச் சுவர் அமைக்கும் பணிகள், தண்ணீர் தடையின்றிச் செல்வதை மேம்படுத்த மண்படுகைத் தளத்தைக் கான்கிரீட் தளமாக மாற்றும் பணிகள், குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க பக்கவாட்டுச் சுவரின் மேல் சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு கம்பிவேலி அமைக்கும் பணிகள், பழுதடைந்து மோசமான நிலையிலிருந்த 3 சிறு பாலங்களை அகற்றிவிட்டு புதிய பாலங்கள் மறுகட்டுமானம் செய்யும் பணிகள் ஆகிய பணிகள் பந்தல்குடி கால்வாயில் ரூ.69 கோடியே 21 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

பந்தல்குடி கால்வாய் வழியாக வைகை ஆறு வரை செல்லும் கால்வாயை அகலப்படுத்தும் பணிகள்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது...,"செல்லூர் கண்மாயிலிருந்து பந்தல்குடி கால்வாய் வழியாக வைகை ஆறு வரை செல்லும் கால்வாயை அகலப்படுத்தும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர், பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செல்லூர் கண்மாயில் கொட்டப்பட்டுள்ள மண் அனைத்தும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அகற்றப்படும். பந்தல்குடி கால்வாய் புனரமைப்புப் பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும். ஏற்கனவே சுமார் 200 மீட்டர் நீளத்திற்குத் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. மேலும், வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த சிறப்புத் திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது." இதனைத் தொடர்ந்து, கோரிப்பாளையம் சந்திப்பின் இருபுறமும் மற்றும் தமுக்கம் மைதானப் பகுதியிலும் புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடை அமைப்பதற்கான இடங்களை கள ஆய்வு செய்தனர். இவ்வாய்வின் போது மதுரை மாநகராட்சி மேயர்(பொ)/துணை மேயர் திரு.தி.நாகராஜன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ஜெய்னுலாப்தீன் அவர்கள், நீர்வளத்துறை செயற்பொறியாளர் திரு.சிவபிரபாகர் அவர்கள், வருவாய் கோட்டாட்சியர் திரு. கருணாகரன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரையில் பந்தல்குடி கால்வாயில் நடைபெற்று வரும் ரூ.69.21 கோடி மதிப்பிலான பணிகளை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மழைக்காலங்களில் தண்ணீர் சீராக வெளியேறுவதை உறுதி செய்யும் வகையில், வெள்ளத் தடுப்பு பக்கவாட்டுச் சுவர் அமைக்கும் பணிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தக் கால்வாய் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்தால், கனமழை பெய்தாலும் நீர் தேங்காமல் விரைவாக வெளியேறும் என்பதால் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள். செல்லூர் கண்மாய் பகுதியில் நடைபெற்று வரும் இந்த முக்கியமான கட்டுமானப் பணிகளை மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.