PulseNews
வணிகம்

விருதுநகர் வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 28 அன்று 20+ முன்னணி நிறுவனங்கள்!

விருதுநகர் மாவட்டம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 28.08.2026 அன்று நடைபெறவுள்ளது, வேலை நாடுநர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தகவல்.

வேலை வாய்ப்பு முகாம்

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்; வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 28.08.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், விருதுநகர் சூலக்கரையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் சமர்தனம் டிரஸ்ட், செபாஸ் மெடிகல், ஃப்ளேர்மேக்செல், அடையார் ஆனந்த பவன், ஸ்ரீ ராம் மோட்டார்ஸ் போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, தொழிற்படிப்பு, டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.

தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலை நாடுநர்கள் 28.08.2026 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம் என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு சுய விவரச் சான்றிதழ், அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது 9360171161 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்துள்ளார்.
Source: Read Full Article

Ipd Tamil - Latest Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விருதுநகர் வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 28 அன்று 20+ முன்னணி நிறுவனங்கள்!
PulseNews சுருக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்காக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 28, 2026 அன்று நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா கேட்டுக்கொண்டுள்ளார். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் இந்த முகாம் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business