போற போக்கில் சொல்லவில்லை, ஆதாரம் இருக்கு: ஓபன் பண்ண வச்சிராதீங்க: டென்ஷன் ஆகி பேசிய விஜய்
தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. சுற்றுலா-கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின்போது தி.மு.க. எம்.எல்.ஏ. ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அதற்கு அத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதில்களை அளித்தார். இதனிடையே, தி.மு.க மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா? என திமுக எம்.எல்.ஏ. ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பினார். அப்போது சட்டென்று எழுந்த முதலமைச்சர் விஜய், "இதை நான் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் எதிர்க்கட்சியினர் ஆதாரம், ஆதாரம் என்று கேட்கிறார்கள்; ஒரு வாரத்திற்கு முன்பு நிதி அமைச்சர் பேசும்போது 3 துறைகள் குறித்து ஆய்வு செய்த கோப்புகள் எனது மேசையில் இருப்பதாக தெரிவித்தார். அதை ஒன்றும் அவர் (நிதி அமைச்சர்) போற போக்கில் சொல்லவில்லை; உண்மையிலேயே அந்த கோப்புகள் எனது மேசையில் தான் இருக்கிறது. அத்தனையும் ஆதாரத்துடன் இருக்கிறது; ஓபன் பண்ண வச்சிராதீங்க; எதை எப்போ வெளியிட வேண்டுமோ, அப்போது அனைத்தும் சரியாக வெளியிடப்படும். மக்களிடம் எப்போது பேச வேண்டும்; எண்ண பேசனும், எப்படி பேசனும் என்று பேசிவிட்டுதான் எங்களை அன்பாக, ஆசையாக இங்கே (சட்டசபைக்குள்) கொண்டு வந்து உட்கார வைத்துள்ளார்கள். நான் பேசுவேன், பேசக்கூடாது என்றெல்லாம் இல்லை; இடைத்தேர்தலிலாவது சில பேருக்கு நல்லது நடக்கணும்ல" என்று அவர் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது, ஊரக வளர்ச்சித்துறை குறித்து திமுக எம்.எல்.ஏ ஐ.பெரியசாமி பல்வேறு கருத்துகளை முன்வைத்தார், அதற்கு அமைச்சர் என்.ஆனந்த் பதிலளித்தார்.
அப்போது திமுக மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜய், தாம் எதையும் சாதாரணமாகச் சொல்லவில்லை என்றும், தன்னிடம் அதற்குரிய ஆதாரங்கள் இருப்பதாகவும் ஆவேசமாகத் தெரிவித்தார்.