லலிதா ஜூவல்லரியின் ஆரம்ப பொதுப்பங்கு வெளியீடு தொடக்கம்!
லலிதா ஜூவல்லரி மார்ட் லிமிடெட் நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் லலிதா ஜூவல்லரி மார்ட் லிமிடெட் நிறுவனம் முறையாக ஒப்புதல் பெற்று, சந்தை நிலவரங்கள் மற்றும் பிற காரணிகளுக்குட்பட்டு தனது மூலதனப் பங்குகளை முதல்முறையாக வழங்கும் திட்டத்தை முன் மொழிந்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள தமிழ்நாடு மற்றும் அந்தமான நிறுவனங்களின் பதிவாளரிடம் ரெட் ஹெரிங் ப்ராஸ்பெக்ட்ஸ் ஆவணத்தை இந்நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. இந்நிறுவனம் தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டுக்காக தலா ரூ.5 முகமதிப்பு கொண்டு ஒரு பங்குக்கு ரூ.190 முதல் ரூ.201 வரை விலை வரம்பை நிர்ணயித்துள்ளது. அந்த பங்கு வெளியீடு வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதலீட்டாளர்கள் விண்ணப்பங்களுக்காக திறக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 74 பங்குகளுக்கும் அதன்பிறகு 74 பங்குகளின் மடங்குகளிலும் விண்ணப்பிக்கலாம். தற்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை 49.99 கோடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லலிதா ஜூவல்லரி மார்ட் லிமிடெட் நிறுவனம் தனது முதல் பங்கு வெளியீட்டை (IPO) வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்து, உரிய அனுமதிகளையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.
சந்தை நிலவரங்கள் மற்றும் பிற காரணிகளைக் கருத்தில் கொண்டு, இந்த மூலதனப் பங்கு வெளியீட்டுத் திட்டத்தை நிறுவனம் முன்மொழிந்துள்ளது. இதற்காக, சென்னையில் உள்ள தமிழ்நாடு மற்றும் அந்தமான் நிறுவனங்களின் பதிவாளரிடம் ரெட் ஹெரிங் ப்ராஸ்பெக்ட்ஸ் ஆவணத்தை லலிதா ஜூவல்லரி தாக்கல் செய்துள்ளது.