11 மதுபானங்கள் மீதான தடை திடீர் நீக்கம்: டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பறந்த அதிரடி உத்தரவு
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் இயங்கி வரும் ‘என்ரிகா எண்டர்பிரைசஸ்’ (Enrica Enterprises) தனியார் மதுபான உற்பத்தி நிறுவனம் தயாரித்த 11 வகையான மதுபானங்கள் மீதான விற்பனைத் தடையை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. தடை விதிக்கப்பட்டது ஏன்? என்ரிகா நிறுவனத்தின் தயாரிப்புகளில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளுக்கு மாறாக லேபிளிங் மற்றும் தயாரிப்புப் பெயரிடலில் குளறுபடிகள் இருந்ததாகவும், இயற்கை மற்றும் செயற்கைச் சுவையூட்டிகள் (Natural Identical and Artificial Flavoring Substances) சேர்க்கப்பட்டதாகவும் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் 11 மதுபான வகைகளை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது. தடை நீக்கப்பட்ட 11 மதுபான வகைகள்: என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் (Enrica Old Indie Classic Dark Rum) விஎஸ்ஓபி எக்ஸ்ஷா கோல்ட் பிராந்தி (VSOP Exshaw Gold Brandy) லூயிஸ் வெர்னன்ட் எக்ஸ்ஓ பிளண்டட் பிரீமியம் பிராந்தி (Louis Vernant XO Blended Premium Brandy) மெக்டொவல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி (McDowell's VSOP Brandy - Blended Brandy) நம்பர் 1 மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி (No.1 McDowell's Fine Brandy - Indian Brandy) என்ரிகா விஎஸ்ஓபி செலக்ட் பிராந்தி (Enrica VSOP Select Brandy) என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி (Enrica Platinum Reserve XO Brandy) என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி (Enrica Premium French Brandy) வீரன் ஸ்பெஷல் பிராந்தி (Veeran Special Brandy) ஹனி பீ ஃபைன் பிராந்தி (Honey Bee Fine Brandy - Indian Brandy) மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி (Men’s Club Deluxe Brandy) Ban imposed on 11 types of liquor manufactured by Entrica Enterprises has been lifted within 24 hours. https://t.co/68C7KYM5Ys pic.twitter.com/QmZsuDFm4s — Vignesh Theni (@Vignesh_twitz) August 15, 2026 தடை நீக்க உத்தரவு: இந்நிலையில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் பிரிவு 36(3)(b)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, மேற்படி 11 மதுபான பிராண்டுகள் மீது பிறப்பிக்கப்பட்ட விற்பனைத் தடை உத்தரவு உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக FSSAI தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் ஆர். கஜலட்சுமி ஐ.ஏ.எஸ்., டாஸ்மாக் (TASMAC) மேலாண் இயக்குநருக்கு அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில், இந்த 11 வகை மதுபானங்களின் மீதான தடை நீக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள என்ரிகா எண்டர்பிரைசஸ் எனும் தனியார் மதுபான உற்பத்தி நிறுவனம் தயாரித்த 11 வகையான மதுபானங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த விற்பனைத் தடையை தமிழ்நாடு அரசு திடீரென நீக்கியுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளை மீறி, தயாரிப்பு பெயர் மற்றும் லேபிளிங்கில் குளறுபடிகள் இருந்த காரணத்தாலும், இயற்கை மற்றும் செயற்கைச் சுவையூட்டிகள் குறித்த விதிமீறல்களுக்காகவும் இந்த 11 மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தடையை அரசு திரும்பப் பெற்றுள்ளது.