இலங்கையில் 10 மில்லியன்களால் குறைந்த பொலித்தீன் பாவனை!
இலங்கையில் பொலித்தீன் பயன்பாடு 26 மில்லியனிலிருந்து 16 மில்லியனாகக் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் நுகர்வோர் விவகார அதிகார சபை முன்னெடுத்த (CAA) தீவிர நடவடிக்கையின் மூலம் பொலித்தீன் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மூலம் 2026 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட...

இலங்கையில் பொலித்தீன் பாவனை 26 மில்லியனிலிருந்து 16 மில்லியனாகக் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுகர்வோர் விவகார அதிகார சபை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாகவே, பொலித்தீன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு 2026 ஆம் ஆண்டில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பாகவே இந்தக் கூட்டம் நடைபெற்றது.