“சாதாரண மக்களுக்காக குரல் கொடுத்தோம்” - மின்சார வீடியோ விவகாரம் தொடர்பாக வைஷாலி விளக்கம்
சின்னத்திரை நடிகை வைஷாலி முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்தான 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை முதலில் வரவேற்று வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால் அதை எதிர்த்து அண்மையில் வீடியோ வெளியிட்டார். அதில் கடந்த மூன்று மாதங்களாக சாமானிய மக்களுக்கு அதிகமாக கரண்ட் பில் வருவதாகவும் இதனால் பழையபடி எப்படி கரண்ட் பில் வந்ததோ அதையே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கூறியிருந்தார். இது இணையத்தில் பேசு பொருளானது. பின்பு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கரண்ட் பில் உயர்வு குறித்து விளக்கமளித்து. அதில், நடிகையின் காணொளியை மேற்கோள்காட்டி, கோடை வெயிலினால் மின் பயன்பாடு அதிகரித்ததே மின் கட்டணம் உயர்ந்ததற்கு மூல காரணம் எனத் தெரிவித்திருந்தது. மேலும் புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினார் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தனர். இதனிடையே வைஷாலிக்கு ஒரு தரப்பு கடும் எதிரிப்பையும் விமர்சனத்தையும் வைத்தனர். மற்றொரு தரப்பு ஆதரவும் அன்பையும் பகிர்ந்தனர். இந்த நிலையில் வைஷாலி தன்னை எதிர்த்தவர்களுக்கு விளக்க வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவரது கணவருடன் தோன்றி கண்கலங்கியடி அமர்ந்திருந்தார். பின்பு இருவரும் பேசியதாவது, “நாங்கள் குறிப்பிட்ட சாமானிய மக்கள், சாதாரண மக்கள்... ஏழைகள் கிடையாது. 10-ல் 6 பேருக்கு கரண்ட் பில் கம்மியாக வந்தாலும் 4 பேருக்கு அதிகமாக வருகிறது. அந்த 4 பேருக்காகத்தான் நாங்கள் குரல் கொடுத்தோம். நாங்கள் வீடியோ போட்டு அவர்களுக்கு எதாவது நல்லது நடந்தால் சந்தோஷம் என்ற அடிப்படையில் வீடியோ போட்டோம். இந்த பிரச்சனையை விஜய் அண்ணாவுக்கு எங்களால் நேரடியாக எடுத்து செல்லமுடியுமா என்பது தெரியவில்லை. அதனால் வீடியோ வெளியிட்டு அதன் மூலம் அதிகாரிகள் அவரிடம் சொல்ல வாய்ப்பிருப்பதால் வீடியோ வெளியிட்டோம். நாங்கள் பேசியதற்கு ஆதாரம் கேட்டால் தருகிறோம், மாற்று கருத்து இருந்தால் அதை சொல்லுங்கள் ஏற்றுகொள்கிறோம். அதைவிட்டுவிட்டு தனிப்பட்ட வாழ்க்கையை ஏன் தரக்குறைவாக விம்ரசிக்கிறீர்கள். விஜய்க்கு ஓட்டுகேட்ட உரிமையில் வீடியோ வெளியிட்டோம். நாங்கள் இதற்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை, இதற்கு முன்பு ஒசூர் டேம், குழந்தை பாலியல் என தொடர்ச்சியாக எங்களால் முடிந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறோம். நாங்கள் தவெக, திமுக என எந்த கட்சியிலும் இல்லை” என்றனர்.

சின்னத்திரை நடிகை வைஷாலி, முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்தான 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை ஆதரித்து முதலில் வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால், கடந்த மூன்று மாதங்களாக சாதாரண மக்களுக்கு மின்சாரக் கட்டணம் அதிகமாக வருவதாகக் கூறி, அதை எதிர்த்து சமீபத்தில் அவர் மற்றொரு வீடியோவை வெளியிட்டார்.
பழைய முறையிலேயே மின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்திய அவரது வீடியோ இணையத்தில் விவாதப் பொருளானது. இந்த மின் கட்டண உயர்வு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.