Chennai News Today LIVE Updates: விஜய்யுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சந்திப்பு
Tamil Nadu News LIVE சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) ஆகியவற்றின் விற்பனை விலையில் எந்தவித மாற்றமுமின்றி முந்தைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ சிஎன்ஜி ரூ.97.00 என விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விஜயுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சந்திப்பு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, வங்கித்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மாநில அரசின் நிதிசார்ந்த உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (21.8.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு. சஞ்சய் மல்கோத்ரா அவர்கள் சந்தித்துப் பேசினார். #CMJosephVijay pic.twitter.com/eRa8E58wzI — CMOTamilNadu (@CMOTamilnadu) August 21, 2026

சென்னையில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும், ஒரு கிலோ சிஎன்ஜி ரூ.97.00 என்ற பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.