PulseNews
வணிகம்

சென்னை குடிநீர் விநியோகத்தை நவீனப்படுத்த திட்டம்: இந்தியா - ஆசிய மேம்பாட்டு வங்கி இடையே ரூ.1,950 கோடி கடன் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னையில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றும் கட்டமைப்புகளை வலுப்படுத்த, ஆசிய மேம்பாட்டு வங்கியுடன் (ஏ.டி.பி) ரூ.1,950 கோடி (230 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெருநகர சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளைத் தரம் உயர்த்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 'சென்னை பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் குடிநீர் பாதுகாப்பு மற்றும் கழிவுநீர் திட்டத்தை' அமல்படுத்த நிதி அமைச்சகமும் ஆசிய மேம்பாட்டு வங்கியும் இணைந்து இந்த புதிய நிதி உதவியை உறுதி செய்துள்ளன. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் குடிநீர் பாதுகாப்பு மற்றும் கழிவுநீர் திட்டம், நகரின் பருவநிலை மாற்றத் திறனை வலுப்படுத்தவும், பொது சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், மேலும் திறமையான மற்றும் நிதி ரீதியாக நிலையான நகர்ப்புற குடிநீர் அமைப்பிற்கு ஆதரவளிக்கவும் உதவும். மறுசீரமைப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் 2.0 (அம்ருத் 2.0) மற்றும் நகர்ப்புற சவால் நிதி ஆகியவற்றின் கீழ் இந்திய அரசின் முதன்மை நகர்ப்புற வளர்ச்சி முயற்சிகளுக்கு ஏற்ப, ஆசிய மேம்பாட்டு வங்கியின் இந்த சமீபத்திய முதலீடு, பாதுகாப்பான மற்றும் சமமான குடிநீர் மற்றும் கழிவு மேலாண்மை சேவைகளுக்கான அணுகலை விரிவாக்குவதற்காக சென்னையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சியாக அமைகிறது. இந்திய அரசும் ஆசிய மேம்பாட்டு வங்கியும் (ஏ.டி.பி) சென்னையின் குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும் விரிவாக்கவும் $230 மில்லியன் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. கடன் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான இந்திய அரசின் நடவடிக்கைகள், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை (இ.ஏ.டி) இணைச் செயலாளர் (ஏ.டி.பி மற்றும் ஜப்பான்) திரு. பாலதேவ் புருஷார்த்தா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, இந்திய அரசின் சார்பில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை துணைச் செயலாளர் திரு. சௌரப் சிங் மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கியின் சார்பில் இந்திய வசிப்பிடப் பிரிவின் இயக்குநர் திருமதி. மியோ ஓகா ஆகியோர் கடன் ஆவணங்களில் கையெழுத்திட்டனர். சென்னை பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் குடிநீர் பாதுகாப்பு மற்றும் கழிவுநீர் திட்டம், சென்னை முழுவதிலும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான குடிநீர் விநியோகம் மற்றும் சிறந்த சுகாதார சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தும். இது பருவநிலை மாற்றத்திற்கு நகரின் மீள்தன்மையை வலுப்படுத்தவும், பொது சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், மேலும் திறமையான மற்றும் நிதி ரீதியாக நிலையான நகர்ப்புற குடிநீர் அமைப்பிற்கு ஆதரவளிக்கவும் உதவும். ஆசிய மேம்பாட்டு வங்கியின் இந்த சமீபத்திய முதலீடு, மறுசீரமைப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் 2.0 (அம்ருத் 2.0) மற்றும் நகர்ப்புற சவால் நிதி போன்ற இந்திய அரசின் முதன்மை நகர்ப்புற வளர்ச்சி முயற்சிகளுக்கு ஏற்ப, பாதுகாப்பான மற்றும் சமமான குடிநீர் மற்றும் கழிவு மேலாண்மை சேவைகளுக்கான அணுகலை விரிவாக்க நகரில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 170 கி.மீ-க்கும் அதிகமான குடிநீர் விநியோகக் குழாய்கள் மற்றும் கழிவுநீர்க் குழாய்கள் அமைக்கப்படும்; ஏழு குடிநீர் பம்பிங் நிலையங்கள் மற்றும் 38 கழிவுநீர் பம்பிங் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்; மேலும் செயல்திறன் அடிப்படையிலான ஒப்பந்தங்கள் மூலம் குடிநீர் பயன்பாட்டுச் சொத்துக்கள் மற்றும் செயல்பாட்டு மேலாண்மை வலுப்படுத்தப்படும். இதன் மூலம், நகர்ப்புற குடிநீர் விநியோக அமைப்பில் சீரான நீர் அழுத்தத்தைப் பராமரிக்கவும், சேவைப் பகுதிகள் முழுவதும் திறம்பட தண்ணீரை விநியோகிக்கவும், நம்பகத்தன்மை, சமத்துவம் மற்றும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட மூடிய-வளைய குழாய் அமைப்பான 'ரிங்-மெயின்' (ring-main) தீர்வை விரிவாக அமல்படுத்தும் முதல் இந்திய நகரமாக சென்னை உருவெடுக்கும். நிகழ்நேர கண்காணிப்பு, தரவு அடிப்படையிலான முடிவெடுத்தல் மற்றும் வாடிக்கையாளர் புகார்களுக்கு விரைந்து பதிலளித்தல் ஆகியவற்றின் மூலம் குடிநீர் மற்றும் சுகாதார சேவைகளை டிஜிட்டல் மயமாக்க ஏ.டி.பி உதவும். அபாயகரமான கைமுறைக் கழிவுநீர் பரிசோதனைகளை ஒழித்தல், அடைப்புகளைக் கண்டறிவதை வேகமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுதல், தொழிலாளர்களின் பாதுகாப்பை அதிகரித்தல் மற்றும் எதிர்கால முதலீடுகளுக்காக பெருநகர சென்னை மாநகராட்சியின் குறைந்தபட்சம் இரண்டு மண்டலங்களில் விநியோக வலையமைப்புகளைத் தயார்படுத்துதல் ஆகியவற்றுக்காக இத்திட்டம் அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும்.” என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சென்னை குடிநீர் விநியோகத்தை நவீனப்படுத்த திட்டம்: இந்தியா - ஆசிய மேம்பாட்டு வங்கி இடையே ரூ.1,950 கோடி கடன் ஒப்பந்தம் கையெழுத்து
PulseNews சுருக்கம்

சென்னையில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றும் கட்டமைப்புகளை நவீனப்படுத்துவதற்காக, ஆசிய மேம்பாட்டு வங்கியுடன் ரூ.1,950 கோடி மதிப்பிலான கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது 230 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இணையான தொகையாகும்.

பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையில், சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளைத் தரம் உயர்த்தவும் மத்திய நிதி அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வத் தகவலை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#business