கொடுத்த தடையை 24 மணி நேரத்தில் நீக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது? - அ.தி.மு.க
தமிழ்நாட்டில் என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ஒரே நாளில் நீக்கி டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. என்ரிகா நிறுவனத்தின் 11 மதுவகைகளில் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் அந்த விற்பனையை நிறுத்த FSSAI அமைப்பு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் என்ரிகா நிறுவனத்தின் மது வகைகளின் விற்பனைக்கு டாஸ்மாக் தடை விதித்தது. இந்நிலையில், உணவுப் பாதுகாப்புப் பிரச்சினைக்காக அல்லாமல், வெறும் லேபிளிங் பிரச்சினைக்காக தங்கள் மீது FSSAI தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்ததாகவும், லேபிளிங் பிரச்சினை மட்டுமே என்பதால் தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டதாகவும் என்ரிகா தெரிவித்தது. இதனிடையே, FSSAI எழுதிய கடிதத்தின் அடிப்படையில் என்ரிகா நிறுவன மதுவகைகளை டாஸ்மாக் கடைகளில் விற்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடுத்த தடையை வெறும் 24 மணி நேரத்தில் நீக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது? என அ.தி.மு.க ஐ.டி. விங் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு காரணம் பயமா? பதற்றமா? என்னவா இருக்கும்? என்றும் வினவியுள்ளது. இதற்கு மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 11 மதுவகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக செயற்கை சுவையூட்டிகள் இருப்பதாகக் கூறி, அவற்றை விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருப்பினும், இந்தத் தடையை விதித்த 24 மணி நேரத்திற்குள்ளேயே டாஸ்மாக் நிறுவனம் அதை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இது வெறும் லேபிளிங் தொடர்பான பிரச்சனை மட்டுமே என்றும், உணவுப் பாதுகாப்பு தொடர்பான சிக்கல் இல்லை என்றும் என்ரிகா நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.