“முதல்வரின் அறிவிப்புக்காக இந்திய நாட்டு மக்களும் காத்திருக்கிறார்கள்” - அமைச்சர் பேச்சு!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் சூழலில், துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதங்கள் நடைபெற்று, பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் வேளாண்மைத் துறை ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, இன்று (31.08.2026) சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் அமைச்சர் வினோத் பேசுகையில்,“நம் தலைவர் (முதல்வர் விஜய்) அன்பில் அண்ணாவாகவும், அழகியலில் எம்.ஜி.ஆராகவும், உங்களை தமிழ்நாட்டு முதல்வராகவும் அமரவைத்து கொண்டாடுகிறார்கள் நம்ம தமிழ்நாட்டு மக்கள். ஒரே விஷயம்தான். தமிழ்நாட்டில் நம் முதல்வரைப் பற்றி செய்திகள் வாசிப்பதைப் போலவே, இந்தியாவில் உள்ள உங்களை நேசிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத்தில் உங்கள் அறிவிப்புகளை எதிர்பார்ப்பது போல, இந்திய நாட்டு மக்களும் உங்கள் ஒரே ஒரு அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், தலைவா. நீங்கள் ஒரு மேடையில் பேசியதை இந்த அவையில் நினைவுபடுத்திக்கொள்கிறேன். ‘ஏண்டா இந்த விஜய்யைத் தொட்டோம்? இந்த விஜய்யோடு உள்ள மக்களை ஏண்டா தொட்டோம்?’ என்று கண்டிப்பாக நினைத்து, நினைத்து ஃபீல் பண்ணுவீங்கன்னு அன்றைக்கு நம் முதல்வர் சொன்னாங்க. கண்டிப்பாக, இப்போது அது நடந்துகொண்டுதான் இருக்கிறது” எனத் தெரிவித்தார். முன்னதாக கடந்த சில தினங்களாக முதல்வர் விஜய், பிரதமர் ஆவார் என்றும் அவர் தான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று தவெக எம்.எல்.ஏக்கள் முதல் அமைச்சர்கள் வரை தொடர்ந்து கூறி வருகின்றனர். இது தவெகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மற்றொருபுறம் தவெக ஆதரவுடன் 2029ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமர் அரியணையில் அமர வைக்கலாம் எனக் காங்கிரஸ் கணக்குப் போட்டு வருகிறது. இத்தகைய சூழலில், முதல்வர் விஜய்யைப் பிரதமர் ஆக்கும் முடிவில் தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து பேசி வருவது காங்கிரஸ் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஒரு மாதமாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இதன்படி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் வேளாண்மைத் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (31.08.2026) நடைபெற்றது.
இந்த விவாதத்தின் போது அமைச்சர் வினோத் பேசுகையில், முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்காக இந்திய நாட்டு மக்களே ஆவலுடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.