BREAKING: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்.... சற்றுமுன் தமிழக அரசின் ஹேப்பி நியூஷ்!!!
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் தொகையை உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது. ஒரு கிராம் தங்கத்துக்கு தற்போது வழங்கப்படும் ரூ.8,000 கடன், ரூ.10,000 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான இறுதி முடிவு அடுத்த வாரம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.10,000 கடன் தங்கத்தின் சந்தை விலை உயர்வை கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் நகையை அடமானமாக வைத்து பெறும் கடன் தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒரு கிராம் தங்கத்துக்கு அதிகபட்சமாக ரூ.8,000 வரை வழங்கப்படுகிறது. புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், இதே அளவு தங்கத்துக்கு ரூ.10,000 வரை கடன் பெற முடியும். அடுத்த வாரம் முக்கிய ஆலோசனை இதுதொடர்பாக அடுத்த வாரம் கூட்டுறவுத்துறை உயரதிகாரிகள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் கடன் தொகையை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், அரசாணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ 1,000 இனி இவர்களுக்கு கிடையாது! தமிழக அரசின் அதிரடி...!!! விவசாயிகள், சிறு வணிகர்களுக்கு கூடுதல் உதவி கூட்டுறவு வங்கிகள் மூலம் நகைக்கடன் பெறும் விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த உயர்வு பயனுள்ளதாக இருக்கும். அவசரத் தேவைகளுக்காக நகையை அடமானம் வைக்கும் நிலையில், முன்பைவிட கூடுதல் தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் கூட்டுறவு வங்கிகளை நம்பியுள்ளவர்களுக்கு நிதி நெருக்கடியில் ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் படிங்க: பயிர்க்கடன் தள்ளுபடி.... முதல்வர் விஜய்யின் அடுத்த சர்ப்ரைஸ்! எதிர்பார்பில் அரசியல் வட்டாரம்!!!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தமிழக கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் தொகையை உயர்த்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இதன்படி, தற்போது ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் 8,000 ரூபாய் கடனை 10,000 ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கடன் உயர்வு தொடர்பான இறுதி முடிவை அடுத்த வாரம் அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ள சூழலில், பொதுமக்களுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.