PulseNews
வணிகம்

நட்சத்திர ஓட்டல்களில் கெட்டுபோன உணவு பொருட்கள் ...1

ஹைஜீனாக இருக்கும் என்று ஆயிரக்கணக்கில் பணத்தை கொடுத்து ஸ்டார் ஓட்டலில் சாப்பிடும் உணவுப்பிரியர்கள் அதிர்ச்சி கொள்ளும் சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. அங்குள்ள 26 ஸ்டார் ஓட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையில் கெட்டுபோன மட்டன், சிக்கன், மீன் இறைச்சிகளும், அழுகிய காய்கறிகளும், ஊசிபோன பேக்கரி பதார்த்தங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன... பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் கெட்டுபோன உணவு பொருட்கள் பரிமாறப்படுவதாக உணவு பொருள் பாதுகாப்பு துறையினருக்கு அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் வந்தன. முக்கிய அரசியல் பிரமுகர்கள் சாப்பிடும் போதும் இதனை உணர்ந்ததாக கூறியதை தொடர்ந்து அங்குள்ள 3 நட்சத்திர மற்றும் 5 நட்சத்திர ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 26 ஓட்டல்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் சமையலறைகள் சுகாதாரக்கேடாக இருந்ததாக தெரிவித்த அதிகாரிகள் 36 வகையான கெட்டுபோன இறைச்சி , காய்கறி மற்றும் பேக்கரி பதார்த்தங்களை கைப்பற்றி குப்பைகளில் கொட்டினர். இந்த ஆய்வு குறித்து பெங்களூரு உணவு பொருள் பாதுகாப்புத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லலித் அசோக் ஓட்டலில் இருந்து 76 கிலோ கெட்டுபோன இறைச்சி, 200 கிலோ அழுகிய காய்கறிகள், 32 லிட்டர் காலாவதி பால், தாஜ் ஓட்டலில் இருந்து 72 கிலோ இறைச்சி, சாங்ரி-லா ஓட்டலில் இருந்து 15 கிலோ இறைச்சி, போட் சீசன்ஸ் ஓட்டலில் 19 கிலோ அழுகிய இறைச்சி , ரேடிசன் புளூ ஓட்டலில் இருந்து 50 கிலோ கெட்டுபோன சிக்கன், 23 கிலோ இறைச்சி, 7 கிலோ மீன், 25 கிலோ காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டன. விவாந்தா ஓட்டலில் இருந்து ஊசிபோன பேக்கரி உணவு பதார்த்தங்கள் 3 கிலோ கைப்பற்றப்பட்டு குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டது. இந்த நட்சத்திர ஓட்டல்களில் இருந்து 35 உணவு மற்றும் உணவுப் பொருள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றாத சம்பந்தப்பட்ட ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நட்சத்திர ஓட்டல்களில் எல்லாம் விலை ஆயிரக்கணக்கில் வசூலிக்கப்படுகின்றது. குறைந்தபட்ச மனசாட்சியுடன் தரமான உணவுகளை வழங்கி இருக்கலாம் என்று உணவுப்பிரியர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். இதே போல சென்னை வட பழனியில் உள்ள கிரீன்பார்க் நட்சத்திர ஓட்டலில் கரப்பான் பூச்சி பிரியாணி பரிமாறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சினிமாத்துறையினர் அதிகமாக வந்து செல்லக்கூடிய ஓட்டல் என்ற பெருமைக்குரிய நட்சத்திர ஓட்டலான கிரீன் பார்க். இங்கு நடிகர் விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட பிரியாணி உணவில் கரப்பான் பூச்சி வெந்து கிடந்ததால் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ரியாஸ் அகமதுவிடம் செய்தியாளர்கள் தெரிவிக்க, “நானெல்லாம் சத்தம் போடாம சாப்பிடரேன்ல, ஒன்னும் செய்யாது .. நீங்களும் சாப்பிடுங்க” என்று ரொம்ப கூலாக சொன்னதாக சம்பந்தப்பட்ட செய்தியாளர் வேதனை தெரிவித்தார். தமிழக உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறும் போது, கிரீன் பார்க் ஓட்டல் நிர்வாகம் மத்திய உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அனுமதி பெற்றுள்ளதால் அவர்கள் தான் ஆய்வு நடத்த வேண்டும் என்று நழுவினர். இது போன்ற கெட்டுபோன பொருட்களில் தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு விதமான உபாதைகள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் இறைப்பை குடல் நல மருத்துவர் அருள்பிரகாசம் எப்படி பெங்களூருவில் பாரபட்சமின்றி ஆய்வு நடந்ததோ, அதே போல தமிழகத்தில் உள்ள நட்சத்திர விடுதிகள், சிறிய, பெரிய உணவகங்கள் அனைத்திலும் பாரபட்சமின்றி உணவு பொருள் பாதுகாப்புத்துறையினர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Polimer News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நட்சத்திர ஓட்டல்களில் கெட்டுபோன உணவு பொருட்கள் ...1
PulseNews சுருக்கம்

பெங்களூருவில் உள்ள 26 நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், அழுகிய இறைச்சி, காய்கறிகள் மற்றும் காலாவதியான பால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லலித் அசோக், தாஜ், சாங்ரி-லா, ரேடிசன் புளூ உள்ளிட்ட முக்கிய ஓட்டல்களில் இருந்து டன் கணக்கில் கெட்டுப்போன பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னையின் வடபழனியில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஓட்டலில், செய்தியாளர் சந்திப்பின் போது வழங்கப்பட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர்தர ஓட்டல்களில் விலை உயர்ந்த உணவுகளை உண்ணும் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் பாரபட்சமின்றி ஆய்வு நடத்த வேண்டும் என்று பொதுமக்களும் மருத்துவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business