PulseNews
வணிகம்

மதுரை வெப்பம் தணிக்க பசுமைத் திட்டம்: முதன்மை செயலாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !

மதுரையில் வெப்பத்தாக்கத்தை குறைக்க பசுமை திட்டம் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு. அரசுத்துறை முதன்மை செயலாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

அதிக வெப்ப அபாயம் கொண்ட நகரங்களில் மதுரை 7-வது இடத்தில் உள்ளது.

மதுரை மானகிரி பகுதியை சேர்ந்த செல்வக்குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை மாநகரில் அதிகரித்து வரும் வெப்ப தாக்கத்தை குறைக்கவும், வைகை ஆற்றின் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்கவும், நகர்ப்புற பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் உத்தரவிடக் கோரி மனு செய்துள்ளார். மேலும் மதுரை நகரில் நகரமயமாக்கல், சாலை மற்றும் நெடுஞ்சாலை விரிவாக்கம், கட்டுமானப் பணிகள் மற்றும் பழமையான பெரிய மரங்கள் அகற்றப்படுவதால் பசுமைப் பரப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக ‘Urban Heat Island’ எனப்படும் நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு அதிகரித்து பொதுமக்கள் கடும் வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட 2026-ம் ஆண்டு ஆய்வுப்படி உலகளவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 205 நகரங்களில் அதிக வெப்ப அபாயம் கொண்ட நகரங்களில் மதுரை 7-வது இடத்தில் உள்ளது.

Green Madurai Action Plan

வைகை ஆற்றங்கரைகளில் பூர்வீக மரங்களை வளர்ப்பது, முக்கிய சாலைகளில் ஈடுசெய் மரக்கன்றுகளை நடுவது, பசுமைப் பூங்காக்களை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நகரின் வெப்பநிலையை குறைக்க முடியும். இதுதொடர்பாக கடந்த 31.07.2026 அன்று வைகை ஆற்றங்கரை மீட்பு, பசுமைப் பூங்காக்கள், மாவட்ட பசுமைப் பணிக்குழு, நெடுஞ்சாலையோர மரக்கன்றுகள் மற்றும் மதுரைக்கென வெப்ப அலை செயல் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுத் துறைகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ‘Green Madurai Action Plan’ என்ற ஒருங்கிணைந்த பசுமை மதுரை செயல்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தவும், வைகை ஆற்றங்கரைகளை பசுமையாக்கவும், நகர்ப்புற பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், வெப்ப அலை தடுப்பு செயல் திட்டத்தை உருவாக்கவும் அரசுத் துறைகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். மேலும், இந்த நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

வழக்கை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுகுறித்து வனம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை முதன்மை செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மதுரை வெப்பம் தணிக்க பசுமைத் திட்டம்: முதன்மை செயலாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !
PulseNews சுருக்கம்

மதுரையில் நிலவும் அதீத வெப்பத்தை குறைக்கும் வகையில் பசுமைத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மானகிரி பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதிக வெப்ப அபாயம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மதுரை 7-வது இடத்தில் உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுத்துறை முதன்மை செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business