PulseNews
வணிகம்

'இலவச மின்சாரம் வெறும் கண்துடைப்பு-தலையில் இடிக்கும் மூன்று மடங்கு பில் '-வெளுத்து வாங்கிய சுப்புரத்தினம்

தவெக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்த 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் என்பது முற்றிலும் மக்களை ஏமாற்றும் ஒரு கண்துடைப்பு வேலை என்றும், புதிய ஆட்சி அமைந்த நூறு நாட்களுக்குள்ளேயே தமிழகம் முழுவதும் மின்சாரக் கட்டணம் பல மடங்கு உயர்ந்து பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் என்றும் முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக நக்கீரன் டிவி சேனலுக்கு முன்னாள் எம்எல்ஏவும், திமுக செய்தி தொடர்பாளருமான சுப்புரத்தினம் அளித்த பேட்டியில் இதுகுறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், ''இந்த புதிய அரசு மக்களுக்கு அறிவித்துள்ள 200 யூனிட் இலவச மின்சாரம் என்பது ஒரு மிகப்பெரிய ஏமாற்று வேலை, சுத்தப் பொய் ஆகும். தமிழகத்தில் நீங்கள் எந்த மின் நுகர்வோரை அல்லது பயனாளியைக் கேட்டுப் பார்த்தாலும் இவர்களின் கள்ளத்தனம் மிகத் தெளிவாகப் புரியும். ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்குக் கொடுத்த 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் நடைமுறையில் இருந்தது. இப்போதைய அரசு அதனுடன் மேலும் ஒரு 100 யூனிட்டைச் சேர்த்துவிட்டு, அதை இவர்களுடைய சொந்தப் புதிய திட்டம் போல '200 யூனிட் இலவச மின்சாரம்' என்று விளம்பரம் தேடிக் கொள்கிறது. இந்த லட்சணத்தில் இவர்களின் கடந்த மாத மின்சார பில் கணக்கீட்டைப் பார்த்தால் தமிழ்நாடே அதிர்ந்து போய் கிடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு இரண்டு மடங்கு, மூன்று மடங்கு என்று மின்கட்டணம் தாறுமாறாக, அநியாயமாக அதிகமாக வந்திருக்கிறது. நீங்கள் உங்கள் வீட்டில் எலக்ட்ரிக் பில், வாட்டர் பில், ஹவுஸ் டேக்ஸ் எல்லாம் கட்டுகிறீர்களா அல்லது வீட்டில் உள்ள மற்றவர்களைக் கட்டச் சொல்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது, ஆனால் மக்கள் படும் அவதி என் கண்ணுக்குத் தெரிகிறது. இதனைப் பற்றி தற்போதைய மின்சாரத் துறை அமைச்சராக இருக்கக்கூடிய நிர்மல் குமார் அவர்களிடமே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, 'ஆமாம், கணக்கீட்டில் தவறு நடந்துவிட்டது தான்' என்று மிகச் சாதாரணமாக ஒப்புக்கொள்கிறார். ஏறத்தாழ 3 கோடியே 30 லட்சம் பயனாளிகளுக்குத் தவறான கணக்கீடு செய்யப்பட்டு, இரண்டு மடங்கு, மூன்று மடங்கு கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் தலைமைப் பொறியாளரே (சி.இ) ஒப்புக் கொண்டுள்ளார்.இதற்குப் பெயர் தான் நிர்வாகத் திறமையா? எப்படி இவ்வளவு பெரிய தவறு நடக்கும் ? கடந்த ஐந்து ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சிக் காலத்தில் முறையாகக் கணக்கீடு செய்யப்பட்டு, தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு, மக்களுக்கு எவ்வித சுமையுமின்றி முறையான பில் மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே டபுள் தி டைம் டிரிபிள் தி டைம் என்று மின்கட்டணத்தை ஏற்றி, அதை மக்கள் மீது ஒரு பெரும் சுமையாக இறக்கியுள்ளனர். இந்த கொடுமையான மாற்றத்தையும் அநியாயத்தையும் எதிர்பார்த்தா தமிழக மக்கள் தங்களின் விலைமதிப்பற்ற ஓட்டுகளை இவர்களுக்கு வழங்கினார்கள்? இந்த நிர்வாகச் சீர்கேட்டிற்குப் புதிய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?'' என்றார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'இலவச மின்சாரம் வெறும் கண்துடைப்பு-தலையில் இடிக்கும் மூன்று மடங்கு பில் '-வெளுத்து வாங்கிய சுப்புரத்தினம்
PulseNews சுருக்கம்

தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் என்பது மக்களை ஏமாற்றும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்று முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் விமர்சித்துள்ளார். புதிய அரசு பதவியேற்ற நூறு நாட்களிலேயே மின்சாரக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நக்கீரன் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், திமுக செய்தித் தொடர்பாளருமான சுப்புரத்தினம் இக்கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். மின்சாரக் கட்டண உயர்வால் மக்கள் சந்திக்கும் சிரமங்களை அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#business