PulseNews
வணிகம்

மிஸ் பண்ணிடாதீங்க! இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!

Kanchipuram ITI direct admission last date: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Government ITI) 2026 - 2027-ஆம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு கால தொழிற்பயிற்சிகளில் சேர்ந்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தி.சினேகா தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள தகுதியான நபர்கள் வரும் 14.08.2026-க்குள் விண்ணப்பித்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயன் பெறலாம்.

நவீன மற்றும் தொழில் துறை சார்ந்த பயிற்சிகள்

காஞ்சிபுரம், சாலவாக்கம் மற்றும் ஒரகடம் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகள் பாடமாக வழங்கப்படுகின்றன. இதில் இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனுஃபேக்ச்சரிங் டெக்னீசியன், அட்வான்ஸ்டு CNC மிஷினிங் டெக்னீசியன், கம்ப்யூட்டர் எய்டெட் மேனுஃபேக்ச்சரிங் புரோகிராமர், டெக்னீசியன் மெகாட்ரானிக்ஸ், காஸ்மடாலஜி, கம்மியர் மோட்டார் வாகனம், கம்மியர் மின்னணுவியல், மெக்கானிக் எலக்ட்ரிக் வண்டி, மேனுஃபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், இண்டஸ்ட்ரியல் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் டெக்னீசியன், லென்ஸ் அண்ட் பிரிசம் கிரைண்டிங் மற்றும் டிரைவர் கம் மெக்கானிக் போன்ற பல பாடப்பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் உதவித்தொகை

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுமட்டுமன்றி, மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட உபகரணங்கள், சீருடைகள் மற்றும் சீருடைகளுக்கான தையற்கூலி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750/- வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று ஐ.டி.ஐ படிப்பில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித்தொகையும், மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித்தொகையும் தொடர்ந்து வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள்

இச்சேர்க்கை தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் சந்தேகங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் அந்தந்த பகுதி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். காஞ்சிபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 9659452204 என்ற எண்ணிலும், சாலவாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 9840893558 என்ற எண்ணிலும், ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 9715472686 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மிஸ் பண்ணிடாதீங்க! இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
PulseNews சுருக்கம்

காஞ்சிபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு கால பயிற்சிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தி.சினேகா தெரிவித்துள்ளார்.

சேரும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி மற்றும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியுடைய நபர்கள் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business